Published : 04 Jan 2019 09:14 AM
Last Updated : 04 Jan 2019 09:14 AM
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை தயாரிக்கும் நிறுவனங் கள் குறித்த விவரங்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட் டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்க ளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அவற்றை பயன் படுத்த தமிழக அரசு தடை விதித்துள் ளது. அதன்படி உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டு, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டு, பிளாஸ் டிக் பூசப்பட்ட காகித குவளை, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் குவளை, தெர்மாகோல் குவளை, நீர் நிரப்ப பயன்படும் பாக்கெட், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் பை (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பை, பிளாஸ்டிக் கொடி, நெய்யாத பிளாஸ்டிக் பை போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மாற்றாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத் தாள், காகிதச் சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தாலான குவளைகள், மூங்கில் மற்றும் மரப் பொருட்கள், காகிதக் குழல்கள், துணி, காகிதம் மற்றும் சணலால் தயாரிக்கப் பட்ட பை, காகிதம் மற்றும் துணியால் ஆன கொடி, பீங்கான் பாத்திரம், மண் கரண்டி, உணவுப் பொருட்களை வெட்ட பயன்படுத்தும் மர தேக்கரண்டி, மண் குவளை போன்ற 12 வகையான பொருட்களை பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் மக்கள் மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்கு விக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் மாற்றுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியலை மாவட்ட வாரியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட் களை பயன்படுத்த மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அத்தகைய பொருட்கள் எங்கு விற்பனையாகிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தயாரிப்பாளர்களுக்கும் வாடிக்கையா ளர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை. அதனால் அவர்களை இணைக்கும் வகையில், உற்பத்தி யாளர்கள், அவர்கள் உற்பத்தி செய் யும் பொருட்கள், அவர்களின் தொடர்பு எண் மற்றும் முகவரி ஆகியவற்றை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்பு ணர்வுக்காக உருவாக்கப்பட்ட www.plasticpollutionfreetn.org இணைய தளத்தில் வெளியிட்டுள்ளோம். அதை தொடர்புகொண்டு மாற்றுப் பொருட் களை வாங்கிக்கொள்ளலாம். அந்த இணையதளத்தில் 650-க்கும் மேற் பட்ட நிறுவனங்களின் விவரங்கள் உள்ளன. இவை அனைத்தும் சிறு, குறு நிறுவனங்களாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாற்றுப் பொருட்கள் விற்பனை நிலவரம் குறித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாக்கு மட்டை தட்டு, குவளைகள் தயாரிக்கும் ஏ.இளையராஜா கூறும்போது, “பிளாஸ்டிக் தடை அமலான பிறகு மாற்றுப் பொருட்கள் விற்பனை அதிக ரித்துள்ளது. இதற்கு முன்பு அன்ன தானம், கோயில் திருவிழாக்களின் போதுதான் பாக்கு மட்டை தட்டுகள் விற்பனையாகும். தற்போது உணவ கங்கள், விழாக்களில் பயன்படுத்த அதிக அளவில் வாங்கிச் செல்கின் றனர். இணையதளத்தில் பார்த்தும் பலர் எங்களை தொடர்புகொள் கின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT