Published : 25 Jan 2019 11:17 AM
Last Updated : 25 Jan 2019 11:17 AM
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுக்காக இந்த ஆண்டு அதிகமான காளைகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், பரிந்துரையின் பேரில் வாடிவாசலில் காளைகளுக்கு முன்னுரிமை வழங்காததாலும், திட்டமிடுதல் இல்லாததாலும் ஏராள மான காளைகள் வாடிவாசலைப் பார்க்காமலேயே திரும்பிச் சென்றன. அதனால், மறுநாளே அலங்காநல்லூர் அருகே குறவன் குளம் காளை வளர்ப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூரில் 8 மணி நேரம் ஜல்லிக்கட்டு நடந்தது. ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சம் 90 காளைகள் வாடிவாசலில் அவிழ்க்க முடியும். ஆனால், 1,400 காளைகள் பதிவு செய்ததில் 729 காளைகள் மட்டுமே அவிழ்க் கப்பட்டன. 671 காளைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
காளைகளை அவிழ்க்க முடியாதவர்கள் விரக்தியுடன், வாடிவாசல் பின்புறம் தாங்கள் முந்தைய நாள் இரவு முதல் ஜல்லிக்கட்டு நடந்த மறுநாள் மாலை வரை அடைந்த இன்னல்களையும், துய ரங்களையும் சமூக வலைதளங் களில் பதிவிட்டு வருவது பரிதா பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காளையின் உரிமையாளர் ஒருவர் கூறிய தாவது: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்த முந்தைய நாள் இரவு 7 மணி முதல், வரிசை யில் காளைகளுடன் வாடிவாசல் அருகே ஒரு பள்ளிக்கூடத்தில் எங்களை அடைத்தனர். மறுநாள் மாலை வரை காத்திருந்தும் காளை களை அவிழ்க்க முடியவில்லை. வேண்டிய காளைகளை விழாக் குழுவினர், போலீஸார் வரி சையை மீறி வாடிவாசலுக்கு அனுப்பினர்.
ஆனால், எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு வாடிவாசலில் காத்திருந்தோம். திடீரென போட்டியே முடிந்தது என்றார்கள். காளைகளை வாடிவாசலில் அவிழ்த்துவிட டோக்கன் வழங்கியது வெறும் கண்துடைப்பு. பணமும், அதிகார மும் படைத்தவர்களே இனி காளைகளை வளர்க்க முடியும். அவர்களால்தான் வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிடவும் முடியும்.
காளைகளைப் பரிசோதனை செய்து டோக்கன் பெறுவது முதல் வாடிவாசலில் அவிழ்த்து விடுவது, போட்டியை காண கேலரியில் பாஸ் பெறுவது என அனைத்துக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பரிந்துரை தேவைப் படுகிறது.
வெறும் வார்த்தை
மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் ஜல்லிக்கட்டில் வாடிவாசலின் முன்பாக நடந்ததை மட்டுமே பார்த்தனர். ஆனால், வாடி வாசலுக்குப் பின்னால் நடந்த முறைகேடுகளும், துன்பங்களும் தெரிவதும் இல்லை, தெரிந்து கொள்ளவும் இல்லை. ஆயிரக் கணக்கில் செலவு செய்து வளர்க்கும் காளையை வாடி வாசலில் அவிழ்த்துவிட முடியாமல் பட்ட வலி, காளைகளை வளர்த் தவர்களுக்கே தெரியும். அலங்கா நல்லூர் உலகப்புகழ் ஜல்லிக் கட்டு என்பது வெறும் வார்த் தையில் மட்டும்தான்’’ என் றனர்.
ஜல்லிக்கட்டு குழு நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வீரர்கள் பதிவு வெளிப்படையாகவே நடந்தது. ஆனால், காளைகள் பதிவு மாவட்டம் முழுவதும் கால்நடை மருத்துவமனைகளில்தான் நடந்தது. இதில், எத்தனை காளைகள் பதிவு செய்யப்பட் டன என்ற விவரம் விழாக் குழுவினருக்குத் தெரியப்படுத்த வில்லை. வருவாய், காவல்துறை மற்றும் ஆளுங்கட்சியினர் உள் ளிட்டோரின் தலையீட்டால் காளைகள் பதிவு எண்ணிக்கை அதிகமானது. இதுவே அனைத்துக் காளைகளையும் அவிழ்த்துவிட முடியாமல் போனதற்குக் கார ணம். எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT