Published : 10 Apr 2014 12:55 PM
Last Updated : 10 Apr 2014 12:55 PM
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, மே 21-ம் தேதி நடத்தப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தரா தேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது:
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை மே 21-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்த உத் தேசிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏப்ரல் 22-ம் தேதி அல்லது அதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT