Published : 17 Jan 2019 09:53 AM
Last Updated : 17 Jan 2019 09:53 AM
பிஎஸ்என்எல் நிறுவனம், தமிழகத்தில் 4ஜி சேவையைத் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச் சில் மேற்கொண்டு வருகிறது. இதற் காக, விரைவில் சோதனைகள் நடத்தப் பட உள்ளதாக, அந்நிறுவனம் தெரி வித்துள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங் களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்க உள்ளது. இதற்கான சோதனை விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறு வனம் தமிழ்நாடு சர்க்கிள் தலைமை பொதுமேலாளர் ராஜூ ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற் போது 80 லட்சம் மொபைல் போன் வாடிக் கையாளர்களும், 9 லட்சம் தரைவழி தொலைபேசி (லேண்ட்லைன்) வாடிக் கையாளர்களும், 3.50 லட்சம் பிராட் பேண்ட் வாடிக்கையாளர்களும் உள்ளனர். பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர் களை கவர்வதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகை யில், தற்போது 4ஜி சேவையைத் தொடங்க உள்ளது.
மத்திய அரசு 4ஜி சேவையைத் தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இச்சேவையைத் தொடங்குவற்கான நடவடிக்கைகளை பிஎஸ்என்எல் நிறு வனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த சேவையைத் தொடங்குவதற்காக செல்போன் கோபுரங்களில் 4ஜி சேவையை அளிப்பதற்கான சிக்னல் களைப் பெறுவதற்கான கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 5,500 செல்போன் கோபுரங்கள் உள்ளன. இதில், 800 கோபுரங்களில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 4ஜி சேவையைத் தொடங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் இது வரை வழங்கப்படவில்லை. எந்நேரமும் ஸ்பெக்ட்ரம் வழங்கப்படும் என்ற நிலை உள்ளதால், அதை வழங்கிய உடனே 4ஜி சேவையைத் தொடங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இதற்காக, விரைவில் சோதனைகள் நடைபெற உள்ளன. ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து அங்குள்ள அனைவருக்கும் 4ஜி சிம் வழங்கப்பட்டு சோதனை நடத்தப்படும். அப்போது, சிக்னல் கோளாறு உள்ளிட்ட பிரச்சினை கள் ஏதேனும் ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
4ஜி சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் போது வாடிக்கையாளர் களுக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற் படாத வகையில் தரமான சேவை வழங்கப்படும்.
சென்னையில் வெள்ளம் வந்த போதும், கஜா புயலின்போது தென்மாவட்டங் களிலும் எந்தவொரு தனியார் நிறுவனங் களின் செல்போன் சேவையும் கிடைக்காத நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும்தான் தடையில்லா சேவையை வழங்கியது. அதேபோல், செல்போன் களுக்கு வரும் அழைப்புகளுக்கும் (இன்கமிங் கால்) தனியார் தொலைபேசி நிறுவனங்கள் மாதம்தோறும் கட்டணம் வசூலிக்கும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும்தான் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் ஒருவருட வேலிடிட்டி வழங்கி வருகிறது. எனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர் களுக்கு தரமான, லாபகரமான சேவையை வழங்க கடமைப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜூ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT