Published : 08 Jan 2019 08:54 AM
Last Updated : 08 Jan 2019 08:54 AM

17 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் லாரி ஓட்டுநர்; தீவனத்துக்காக ஒரு நாளைக்கு ரூ. 4,250 செலவிடுகிறார்

மதுரை அருகே வீரபாண்டி என்பவர் 17 ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்து வருகிறார். காளைகளின் தீவனத்துக்காக மட்டும் தினமும் ரூ. 4,250 செலவிடுகிறார்.

மதுரை சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வீரபாண்டி. இவர், 17 ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்து வருகிறார். இக்காளைகளை ஜல்லிக்கட் டுப் போட்டிக்கு தயார்படுத்தி உள்ளார்.

ஒவ்வொரு காளைக்கும் குட்டி, மானு, பாண்டி, செவலை, ராமு, சின்ன கேடி, பெரிய கேடி, கொம்பன் என செல்லப் பெயர்களைச் சூட்டி வாஞ்சையாக அழைக்கிறார். காளைகளுக்கு வயதாகி விட்டால், அவற்றை இறைச்சிக்கு விற்று விடாமல் கவனித்துக் கொள்கிறார். இதற்காக நகரில் உள்ள இவரது வீட்டுக்குக்கூடப் போகாமல் மாட்டுக் கொட்டகையிலேயே தங்கியுள்ளார்.

காளைகளை தன்னைப்போல் வேறு யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ப தாலேயே, இவர் வெளியூர்களுக்கு லாரி களை ஓட்டிச் செல்வதில்லை. இந்த ஆண்டு 27 காளைகளை வளர்த்து வந் தார். இதில், 10 காளைகளை ஈரோடு, திருப்பூர், திருச்சியைச் சேர்ந்தவர் களுக்கு அண்மையில் விற்று விட்டார். தற்போது 17 காளைகளை இந்த ஆண்டு வாடிவாசலுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தப்படுத்தி உள்ளார்.

காளையோடு ‘காளையாக' நின் றிருந்த வீரபாண்டியிடம் பேசினோம். ‘‘தாத்தா காலத்தில் இருந்தே ஜல்லிக் கட்டுக் காளைகளை வளர்க்கிறோம். காளைகளை பராமரிப்பது, வாடி வாசலுக்கு அழைத்துச் செல்வது சின்ன வயசுலேயே எனக்கு கொள்ளைப் பிரியம். நானும் மத்தவங்களைப் போல, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆசைக்கு ஒரு காளையை மட்டும்தான் வளர்த்தேன். ஆனால், ஜல்லிக்கட்டுக்குத் தடை வந்த போது நிறையபேர் காளைகளை விற்க ஆரம்பிச்சாங்க. அப்போது, அந்தக் காளைகளை விலைக்கு வாங்கினேன்.

ஒரு வைராக்கியத்தில் இந்தக் காளை களை பிள்ளைகளைப்போல் வளர்க் கிறேன். நான் அடிப்படையில் லாரி ஓட்டுநர். படிப்படியாக முன்னுக்கு வந்து, தற்போது 13 லாரிகள் இருக்கு. முன்பு போல் ஓட்டுநர் வேலைக்கு யாரும் வராததால் பாதி லாரிகள் ஓடுவதில்லை. வருமானமும் முன்புபோல இல்லை. கிடைக்கும் வருவாயில் பாதியை காளைகளுக்குச் செலவிடுகிறேன்.

லாரிகளை நிறுத்தி வைக்க வாங்கிய காலி மனையில்தான் தற்போது கொட் டகை அமைத்து காளைகளை பரா மரித்து வருகிறேன். வீட்டுக்கு வாரத்துல ஓரிரு நாள்தான் போவேன். குழந்தைகள் அப்பா, எப்போ வருவீங்கன்னு கேட் குறாங்க. மாடுபிடிக்கிறவங்க முன்னப் போல இல்ல. காளையை அடக்க முன் தயாரிப்போட வர்றாங்க.

போன முறை எனது ஒரு காளைகூட பிடிபடல. என்னோட காளைங்க 4 தங்கக் காசுகள், 2 பீரோக்கள், 3 சைக்கிள்கள், அண்டா, குத்துவிளக்கு பரிசுகளை அள்ளுச்சுங்க. ஒரு காளைக்கு தீவனத் துக்கு மட்டும் தினமும் ரூ. 250 செலவா குது. 17 காளைகளுக்கும் 4,250 ரூபாய் ஆகுது. மக்காச்சோளம், இரும்புச் சோளம், கோதுமை, நவதானியங்களை வாங்கி அரைச்சு கொடுக்கிறேன். நல்லா புஷ்டியாக முட்டை, பால் சேர்த்துக் கொடுக்கிறேன். சில சமயங்களில், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு ஜீரணக் கோளாறு ஏற்படும்.

ஜல்லிக்கட்டுக் காளைகளை நான் பராமரிப்பதைப் பார்த்து வியந்துபோன கால்நடை மருத்துவர் மெரில்ராஜ், இலவசமாக சிகிச்சை அளிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x