Published : 16 Apr 2014 08:59 AM
Last Updated : 16 Apr 2014 08:59 AM
பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கக் கோரியும், சீனப் பட்டாசுகளை இந்தியாவில் தடைசெய்யக் கோரியும் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சிவகாசி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 843 பட்டாசு ஆலைகளில் 5 லட்சத்துக்கும் மேற் பட்டோர் பணியாற்றுகின்றனர். இந் நிலையில், பட்டாசுகளை இருப்பு வைக்க ஆண்டுக் கட்டணம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து, தற்போது ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.பட்டாசு ஆலைக்கான உரிமத் தொகையை ரூ.3 ஆயிரத்திலி ருந்து ரூ.65 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி ஆணை வெளி யிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6-ம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, அனைத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்து சிவ காசியில் செவ்வாய்க்கிழமை உண் ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவகாசியில் அனைத்து வர்த்தக சங்கங்கள் சார் பில் கடையடைப்பும் நடைபெற் றது. உண்ணாவிரதத்தின்போது பேசிய தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.பி.செல்வராஜ், “சீனப் பட்டாசுகளுக்கு தடை விதிப் பதோடு, உயர்த்தப்பட்ட உரிமம் கட்டணத்தையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்” என்றார்.
36 சங்கங்கள் பங்கேற்பு
தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர் சங்கம், இந்திய பட்டாசு உற்பத்தியாளர் சங்கம், தமிழன் பட்டாசு உற்பத்தியாளர் சங்கம், சிவகாசி பட்டாசு விற்பனை பிரதிநிதிகள் சங்கம், அனைத்திந் திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், மதுரை மாவட்டப் பட்டாசு வியாபாரிகள் சங்கம், சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சங்கம், சிவகாசி வர்த்தக சங்கம் உள்ளிட்ட 36 சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
வைகோ ஆதரவு
உண்ணாவிரதப் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசிய தாவது: வெடிபொருள் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சீனப் பட்டாசுகள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கைது செய் யப்பட வேண்டும். இத்தொழிலை நம்பி வாழும் 5 லட்சம் தொழிலா ளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது: “கட்டண உயர்வை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும். பட்டாசுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சிபிஎம் ஆதரவாக இருக்கும்” என்றார்.
தொழிலாளர்கள் முற்றுகை
பட்டாசு ஆலைகளுக்கு விதிக் கப்பட்டுள்ள புதிய உத்தரவுகளை திரும்பப் பெறக் கோரி பட்டாசுத் தொழில் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பெட் ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புத் துறை அலுவல கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT