Published : 22 Sep 2014 11:41 AM
Last Updated : 22 Sep 2014 11:41 AM
அடுத்த ஆண்டு இறுதியில் கோயம்பேடு ஷெனாய் நகர் இடையே 5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.14,600 கோடி செலவில் 45 கி.மீ. தூரத்துக்கு இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், 24 கி.மீ. சுரங்கப் பாதை, 21 கி.மீ. பறக்கும் பாதை. மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்களில், 19 சுரங்கப்பாதை ரயில் நிலையங் கள், 13 பறக்கும்பாதை ரயில் நிலையங்கள் ஆகும்.
சென்னையில் முதல்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் கோயம்பேடு ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதை யில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
இப்பாதையில் ரயில்வே பாது காப்பு ஆணையர் நவம்பர் மாதம் இறுதிக்கட்ட ஆய்வை முடித்து அறிக்கை அளிப்பார் என்றும், டிசம்பர் மாதம் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரங்கள், தரையில் இருந்து 45 அடி ஆழத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 36,308 மீட்டர் நீள சுரங்கப் பாதையில், இதுவரை 29,912 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப் பாதை அமைக் கப்பட்டுவிட்டது. நேற்றுடன் 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
ஒரு சுரங்கப்பாதை ரயில் நிலை யத்துக்கும் மற்றொரு சுரங்கப் பாதை ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள பகுதி “ஒரு டனல் செக்சன்” என்று அழைக்கப்படு கிறது. அவ்வாறு அமைக்க வேண் டிய 40 டனல் செக்சனில், இது வரை 23 டனல் செக்சனில் சுரங்கப் பாதை (மெட்ரோ ரயில் போக்கு வரத்துக்கான தனித்தனி குகை) அமைக்கப்பட்டுவிட்டது.
வண்ணாரப்பேட்டை மண் ணடி, மண்ணடி உயர் நீதிமன்றம், மே தினப் பூங்கா அரசினர் தோட்டம், அரசினர் தோட்டம் எ ல்.ஐ.சி., சைதாப்பேட்டை சாய்தள பகுதியிலிருந்து சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை நந்தனம், நேரு பூங்கா எழும்பூர், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர் அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் கிழக்கு அண்ணா நகர் டவர், அண்ணாநகர் டவர் திருமங்கலம் ஆகிய சுரங்கப்பாதை ரயில் நிலையங்களுக்கு இடையே 2 சுரங்கப்பாதைகளும் முழுவதுமாக அமைக்கப்பட்டுவிட்டன.
உயர் நீதிமன்றம், கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, அண்ணா நகர் டவர், திருமங்கலம் ஆகிய 5 சுரங்கப் பாதை ரயில் நிலையங் களில் கட்டுமானப் பணி முடிந்து விட்டது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “சுரங்கப் பாதையில் முதல்கட்டமாக கோயம் பேடு ஷெனாய் நகர் இடையே 5 கி.மீ. தூரத்துக்கு முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்து அடுத்த ஆண்டு டிசம்பரில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பாதையில் கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ஆகிய 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங் கள் உள்ளன. 2016-ம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் பாதை, சுரங்கப் பாதை (45 கி.மீ.) அமைக் கப்பட்டுவிடும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT