Published : 08 Dec 2018 08:22 AM
Last Updated : 08 Dec 2018 08:22 AM

அரசு விரைவு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு  5 தனியார் இணையதளங்களில் விரைவில் தொடக்கம்

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட்களை 5 தனியார் இணையதளங்களில் முன் பதிவு செய்யும் வசதி விரைவில் தொடங்கவுள்ளது.

தமிழக அரசு விரைவு போக்கு வரத்து கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூரூ உள்ளிட்ட இடங்களில் தினமும் சுமார் 1,080 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்துகள் வழங்கப்படாததால், பழைய பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டன. இந் நிலையில் அரசு விரைவு போக்கு வரத்து கழகத்தில் முன்பு ஏசி வசதி யுள்ள பேருந்துகள் - 40, கழிப்பறை வசதி கொண்ட பேருந்துகள் 10, சொகுசு பேருந்துகள் 50 என 100 புதிய பேருந்துகள் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, அரசு போக்கு வரத்து கழக இணையதளம் (www.tnstc.in) மட்டுமல்லாமல், மற்ற தனியார் இணையதளங்கள் வழியாகவும் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வந்தன. இந்நிலையில், 5 தனியார் இணையதளங்கள் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர் பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

புதிய பேருந்துகளின் வருகை யால் சராசரியாக நாளொன்றில் பயணிகளின் எண்ணிக்கை 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அடுத்தகட்டமாக 450 புதிய பேருந்து களை விரைவு போக்குவரத்து கழகத்தில் இணைக்க திட்டமிட் டுள்ளோம். சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் அதிக அளவில் இருக்கும். அரசு போக்குவரத்து கழக இணையதளம் தவிர, மேலும், 5 தனியார் இணையதளங்கள் (www.redbus.in, www.busindia.com, www.makemytrip.com, www.paytm.com, www.goibibo.com) வழியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் தொடங்கவுள்ளோம்.

இதில், நாகர்கோவில், திருநெல் வேலி, கோவை, பெங்களூரு, மதுரை உட்பட பல்வேறு இடங் களுக்கு செல்லும் பேருந்துகளின் பட்டியல் இணைக்கப்படும்.

இதனால், அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். குறிப்பாக, பண்டிகை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை மக்கள் புறக்கணித்து அரசு விரைவு பேருந்துகளில் அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர் பார்க்கிறோம். தனியார் இணைய தள முன்பதிவுக்கு கூடுதல் கட்ட ணம் கிடையாது. அதுபோல், அரசு நிர்ணயம் செய்துள்ள நிரந்தர கட் டணமே வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.www.redbus.in, www.busindia.com, www.makemytrip.com, www.paytm.com, www.goibibo.com வழியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் தொடங்கவுள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x