Last Updated : 26 Dec, 2018 09:01 AM

 

Published : 26 Dec 2018 09:01 AM
Last Updated : 26 Dec 2018 09:01 AM

பரிசோதிக்காமல் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி.யுடன் மஞ்சள் காமாலை பாதிப்பும் இருந்தது: சிவகாசி அரசு மருத்துவமனையில் 3 பேர் தற்காலிக பணி நீக்கம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 8 மாத கர்ப்பிணிக்கு பரிசோதிக்கா மல் ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி யுடன் மஞ்சள் காமாலை தொற்று (ஹெபாடிடிஸ்-பி) இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கவனக் குறைவாகச் செயல்பட்டதாக சிவ காசி அரசு மருத்துவமனையில் 3 பேர் நேற்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மனைவி 2-வது முறையாக கர்ப்பமடைந்தார். அவருக்கு சாத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறை வாக இருந்ததால் ரத்தம் ஏற்ற வேண் டும் என்று மருத்துவர்கள் பரிந் துரைத்தனர். அதையடுத்து, சாத் தூர் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட அப்பெண்ணுக்கு கடந்த டிச.3-ம் தேதி ரத்தம் ஏற்றப்பட்டது. அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக, விருதுநகரில் உள்ள மாவட்ட மருத்துவப் பணி கள் இணை இயக்குநர் மனோகரன் தலைமையில் விசாரணை நடத்தப் பட்டது. இந்நிலையில், இவ்விவ காரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மருத்துவத் துறை யைச் சேர்ந்த அலுவலர்கள் கூறி யது: 8 மாத கர்ப்பிணியான அப் பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ரத்தம், சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் பரிசோதனை செய்யப்படாமல் பெறப்பட்டது. பரிசோதனை செய்யப்படாமலேயே கொடுத்து அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. ஒருவருக்கு ரத்தம் ஏற்றுவதற்கு முன்பு, அந்த ரத்தம் அவருக்கு சேருகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு சாத்தூர் அரசு மருத்துவ மனையில் எந்த சோதனையும் செய்யப்படவில்லை.

மேலும், கர்ப்பிணிக்கு ஏற்றப் பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு மட்டும் இல்லை. அந்த ரத்தத்தில் மஞ்சள் காமாலை தொற்றும் இருந்துள்ளது. தானமாக ரத்தம் பெறப்பட்டவுடன் 5 பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு 5 பரிசோதனைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு இருந்தால் எச்.ஐ.வி. வைரஸ் உள்ளதையும், மஞ்சள் காமாலை தொற்று உள்ள தையும் கண்டுபிடித்திருக்கலாம்.

எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு கூட 90 நாட்களுக்குப் பிறகுதான் தெரியவரும். ஆனால், மஞ்சள் காமாலை தொற்று உள்ளது உடனே தெரிந்துவிடும். இதுமட்டுமல்லாது, எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்புடன் ரத்தம் கொடுத்தவர், பலமுறை ரத்த தானம் அளித்துள்ள சிவகாசியைச் சேர்ந்த கொடையாளர்.

இவர் வெளிநாடு செல்வதற்காக கடந்த வாரம் ரத்தப் பரிசோதனை செய்தபோதே அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, தான் கடந்த 30-ம் தேதி ரத்ததானம் அளித்ததையும், அந்த ரத்தத்தை யாருக்கும் செலுத்திவிட வேண்டாம் என்றும், தானாக முன்வந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் கூறியுள்ளார். அதற்குள் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட அவரது ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது தெரியவந்தது.

பின்னர், கர்ப்பிணியின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு எச்.ஐ.வி. பாதிப் பும், மஞ்சள் காமாலை தொற்றும் உள்ளது கண்டறியப்பட்டது என்று அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சிவகாசி அரசு மருத்துவ மனை ரத்த வங்கி ஆய்வக தொழில் நுட்புனர் வளர்மதி, நம்பிக்கை மைய ஆலோசகர், நம்பிக்கை மைய ஆய்வக நுட்புனர் ஆகியோர் நேற்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் கூறி யது: இவ்விவகாரம் தொடர்பாக முதல்கட்டமாக 3 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் கணவ ருக்கு விருதுநகர் அரசு மருத்துவ மனையில் தற்காலிக ஓட்டுநர் பணி வழங்க பரிந்துரைக்கப்பட உள்ளது என்றார்.

எச்ஐவி பாதித்தவர் பலமுறை ரத்த தானம் செய்தவரா?

கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட எச்.ஐ.வி. உள்ள ரத்தத்தை தானமாக அளித்த நபர் கடந்த 2016-ல் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். அப்போதே அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு கொடையாளருக்கு ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு கண்டறியப்பட்டால் அதை நேரடியாக சம்பந்தப்பட்ட கொடையாளரிடம் தெரிவிக்காமல் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் தெரிவித்து, அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு கவுன்சிலிங் மற்றும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இந்த நடைமுறை சரியாக பின்பற்றப்பட்டதா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அவ்வாறு பெறப்பட்ட ரத்தம், தேவைப்பட்ட வேறு யாருக்கேனும் கொடுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. ஒரு கொடையாளருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரிந்தே மீண்டும் ரத்தம் பெறப்பட்டதா அல்லது முறையான பதிவுகள் இல்லாமலும், புதிய தொழில்நுட்புனர்கள் பணியில் இருந்ததால் தெரியாமல் ரத்தம் பெறப்பட்டதா என்ற விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து விவரங்களை அறிய முயன்றபோது, மருத்துவத் ்துறை அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியவில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x