Published : 19 Dec 2018 08:06 AM
Last Updated : 19 Dec 2018 08:06 AM
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயி லில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. சொர்க்க வாசல் வழியாக மூலவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன் னிட்டு நேற்று ஆந்திரா, தெலங் கானாவில் உள்ள அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே கோயில்களில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். திருப்பதி ஏழுமலையானை சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்ய திங்கட்கிழமை முதலே திரளான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமலையில் குவியத் தொடங்கினர். இதனால், திருமலையில் உள்ள வைகுண்டம் காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் நிரம்பி, கோயிலுக்கு வெளியே நாராயண கிரி பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வரிசையில் பக்தர்கள் காத்திருந்த னர். திங்கட்கிழமை நள்ளிரவு சரி யாக 12.05 மணிக்கு திருமலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்னர், திருப்பாவை சேவை நடந்தது. இதனை தொடர்ந்து விஐபி பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். ஆளுநர் நரசிம்மன் தம்பதி, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மனைவி, தெலங்கானா அமைச்சர் ஹரீஷ் ராவ் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநில தலைமை நீதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் சுவாமியை தரிசித்தனர். அதன் பின்னர் நேற்று அதிகாலை 4.15 மணி முதல் சர்வ தரிசனம் தொடங்கியது. இதில் சாமானிய பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டவாறு ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை யொட்டி, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டு பூக்களாலும், பழங்களாலும் கோயில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், திருமலை மற்றும் திருப்பதி நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு திருமலையில் தங்குவதற்கு போதிய இடமின்றி, ஷெட்களில் தங்க நேர்ந்தது. இதனால் குழந்தைகள், முதியோர் கடும் குளிரில் அவதிப்பட்டனர்.
தங்க ரதத்தில் உற்சவர் பவனி
நேற்று காலை திருமலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில், உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலை யப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தி னர். இன்று துவாதசியையொட்டி சொர்க்க வாசல் திறந்தே இருக்குமென்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT