Published : 26 Dec 2018 09:41 AM
Last Updated : 26 Dec 2018 09:41 AM

அதிக மின் செலவு, காற்று மாசுவை தடுக்க திட்டம்: தகன மேடைகளை எரிவாயுவில் இயக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை - புகை வெளியேறாததால் பராமரிப்பது எளிது

சென்னை மாநகராட்சி மயானங் களில் மின்சாரம் மற்றும் மரக் கட்டைகளால் இயங்கும் தகன மேடைகளை சமையல் காஸ் மூலம் இயக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 88 மயானங்கள் உள் ளன. இவற்றின் 7 மயானங்களில் மின்சாரத்தால் இயக்கப்படும் நவீன தகன மேடைகள் உள்ளன. 25 மயானங்களில், மரக்கட்டை களை எரிக்கும்போது உருவா கும் எரிவாயுவைக் கொண்டு இயக்கப்படும் நவீன தகன மேடைகள் உள்ளன. இந்த நவீன தகன மேடைகளால் அதிக மின் செலவு, துர்நாற்றம் மற்றும் காற்று மாசு ஏற்படுவதால், சமையல் எரிவாயுவை கொண்டு தகன மேடைகளை இயக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

நவீன மின் தகன மேடைகளை இயக்க உயரழுத்த மின்சாரம் தேவை. சடலங்கள் வந்தாலும், வராவிட்டாலும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தகன மேடையை குறிப்பிட்ட வெப்ப நிலையில் தொடர்ந்து வைத்தி ருக்க வேண்டும். 2 மணி நேரம் முன்னதாகவே தயார்படுத்தத் தொடங்க வேண்டும்.

இதனால் மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் மின் செலவு ஏற்படுகிறது. இந்த முறையில் சடலத்தை எரிக்க 2 மணி நேரம் தேவைப்படுகிறது. சாம்பலும் அதிகமாக உருவாகிறது. இவற் றைப் பராமரிக்க அதிக செலவாகி றது. மழை, புயல் உள்ளிட்ட பேரி டர் காலங்களில் இவற்றை இயக்க முடியாது. ஜெனரேட்டர்களாலும் இயக்க முடியாது.

மரக்கட்டைகளைக் கொண்டு இயங்கும் தகன மேடைகளில் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்துவதே சிரமமாக உள்ளது. இதில் அதிக அளவு புகை வெளியேறி காற்று மாசுவை ஏற்படுத்துகிறது. மழைக் காலங்களில் உலர்ந்த விறகுகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஒரு உடலை எரிக்க 1.30 மணி நேரம் பிடிக்கிறது.

ஆனால், சமையல் எரிவாயு மூலமாக இயக்கும்போது, ஒரு சடலத்தை 45 நிமிடங்களில் எரித்துவிடலாம். 1 கிலோ அளவில் தான் சாம்பல் உருவாகிறது. தேவைப்படும்போது தகன மேடையை இயக்கினால் போதும். புகை வெளியேறாது. ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை எளிதாக சமையல் எரிவாயுவுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியும். பராமரிப்பும் எளிது.

ஒரு உடலை எரிக்க ஒரு வணிக சிலிண்டர் (ரூ.1,400) தேவைப்படு கிறது. மாநகராட்சி சார்பில் சடலங்களை எரிக்கும் சேவை இலவசமாக வழங்கப்படுவதால், பெருநிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், எரிவாயு சிலிண்டர்களை இலவசமாகப் பெற பல்வேறு எண்ணெய் நிறுவனங்களை அணுகி வருகிறோம். இதன் மூலம் மாநகராட்சிக்குப் பெருமளவில் செலவு மிச்சமாகும்.

எனவே, எல்லா தகன மேடை களையும் சமையல் எரிவாயு மூலம் இயக்கும் தகன மேடை களாக மாற்றி வருகிறோம். தற் போது பெசன்ட் நகர், மயிலாப் பூர், நெசப்பாக்கம், சைதாப் பேட்டை ஜோன்ஸ் சாலை ஆகிய மயானங்களில் இயங்கும் தகன மேடைகளை சமையல் எரிவாயு மூலம் இயங்கும் தகன மேடை களாக மாற்றி இருக்கிறோம்.

அடுத்ததாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கண்ணம்மா பேட்டை மயானத்தில் புதிதாக சமையல் எரிவாயு மூலம் இயங்கும் தகன மேடையை அமைக்க இருக்கிறோம்.

இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x