Published : 07 Dec 2018 10:33 AM
Last Updated : 07 Dec 2018 10:33 AM
ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதி களில் குடிநீர், மின்சாரம், பாதாள சாக்கடை மற்றும் மேம்பாலப் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால் பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரி சலும், விபத்துகளும் தொடர்ந்து வருகின்றன.
2 மாதத்தில் அனைத்துப்பணிகளும் முடியும்
ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணி, மின் வாரியம் சார்பில் உயர் மின் அழுத்த கேபிள் பதிக்கும் பணி, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணி என நான்கு முக்கியப்பணிகள் மாநகராட்சியில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு பணியையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முழுமையாக முடிந்தால்தான், புதிய சாலைகளை அமைக்க முடியும். ஈவிஎன் சாலையில் பாதாள சாக்கடை இணைப்புப்பணி முடிந்து விட்டது. மின்வாரியத்தின் பணி மீதம் உள்ளது. இதோடு மேம்பாலப்பணியும் முடிவுக்கு வரும்போது, இரு மாதத்திற்குள் நெடுஞ்சாலைத்துறை அங்கு புதிய சாலை அமைத்து விடும். எஸ்.கே.சி.சாலையில் பாதாள சாக்கடைப்பணி ஒரு மாதத்தில் முடிவடைந்துவிடும்.
நாச்சியப்பா வீதியில் பாதாள சாக்கடை பணி முடிவடையவில்லை. அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து பணிகளை விரைவுபடுத்தி யுள்ளதால், இரண்டு மாதத்திற்குள் புழுதிகள் இல்லாத சாலையில் பொதுமக்கள் பயணிக்க முடியும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT