Last Updated : 07 Dec, 2018 09:01 AM

 

Published : 07 Dec 2018 09:01 AM
Last Updated : 07 Dec 2018 09:01 AM

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பாதுகாப்பு, புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகளை விரைந்து முடிக்க 84 வல்லுநர்கள் தேர்வு: இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் திருப்பணிகளை விரைந்து முடிக்க 84 வல்லுநர்களை இந்து சமய அறநிலையத் துறை தேர்வு செய்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 40,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இப்பணிகள் மந்த கதியில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எனவே, பணிகளை துரிதப்படுத்த துறைக்கு வெளியே இருந்து வல்லுநர்களை தேர்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.

இதற்காக, திருக்கோயில் பாது காப்பு, புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வல்லுநர் களை விண்ணப்பிக்கும்படி இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில், சுமார் 150 வல்லுநர்கள் விண்ணப்பித்தனர்.

இவர்களை நேரில் அழைத்து நிபுணத்துவம் ஆராயப்பட்டது.இவர்களில், மரபு வழி கட்டிட கலை மற்றும் சிற்ப கலை ஸ்தபதி ஜி.விநாயக மூர்த்தி தேர்வு செய் யப்பட்டுள்ளார். இவர், தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத் தூர் ஆண்டாள் ராஜகோபுரத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருப் பணியை மேற்கொண்டுள்ளார். தென்காசி கோபுரத்தை கட்டும் போது உதவி ஸ்தபதியாக செயல் பட்டுள்ளார்.

இதுதவிர, சங்கரன் கோவிலில் 9 நிலை ராஜகோபுரம், சேரன்ம காதேவியில் 5 நிலை ராஜகோபுரங் களையும் கட்டியுள்ளார். 100-க் கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணி மற்றும் 100-க்கும் மேற்பட்ட கோயில்களை புதிதாக வும் கட்டியுள்ளார்.

ஆகம மற்றும் சில்ப சாஸ்திர வல்லுநர் ஸ்தபதி டாக்டர் எம்.வி.நரசிம்ம சில்பாசாரியார் வேலூர் காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் திருமுருகன் கோயில் உள்ளிட்ட பல கோயில் களில் திருப்பணிகளை மேற்கொண் டுள்ளார்.

கனடாவுக்கு சென்று அந்நாட்டி னர் 200-க்கும் மேற்பட் டோருக்கு வாஸ்து குறித்து 20 நாட்கள் வகுப்புகளை நடத்தி உள்ளார்.

18 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், கருங்கல் கோயில் கள் கட்டுவது, தேர், சிலைகளை வடிவமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

மரபு வழி கட்டிட கலை மற்றும் சிற்ப கலை ஸ்தபதி ஆர்.ராஜ்குமார் கர்நாடகாவில் உள்ள முருதேஸ்வர் கோயிலின் ராஜகோபுரத்தில் திருப்பணியை மேற்கொண்ட அனுபவம் கொண்டவர். 249 அடி கொண்ட இந்த ராஜகோபுரம் ஆசியாவில் பெரிய ராஜகோபுரமாக விளங்குகிறது. மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று கோயில்களில் திருப்பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

23 ஆண்டுகளாக அனுபவம் பெற்றிருக்கும் இவர் 50-க்கும் மேற் பட்ட கோயில்களில் திருப்பணி களை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு, ஆகம வல்லுநர் கள், கட்டிடக்கலை வடிவமைப் பாளர்கள், ஸ்தபதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற 84 வல்லுநர்களை இந்து சமய அறநிலையத் துறை தேர்வு செய்துள்ளது.

இவர்கள், திருக்கோயில்களின் புனரமைப்பு, பாரம்பரியம் மாறா மல் பாதுகாத்தல், பணிகளை கண்காணித்தல், ஒவ்வொரு திட்டத்துக்கும் திட்ட அறிக்கை தயாரித்தல், திருப்பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்குதல் உள் ளிட்ட பல்வேறு பணிகளில் அற நிலையத் துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருப்பணிகள், கோயில் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை விண்ணப்பிக்கும் படி கேட்டிருந்தோம். அதனடிப் படையில் விண்ணப்பித்த வர்களில் தகுதியான 84 வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை திருப்பணிகள், கோயில் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த உள்ளோம். இவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகு, எப் போது எல்லாம் அவர்கள் பணிக்கு தேவைப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அழைத்து கொள்வோம். அதற்குரிய, ஊக்க தொகையை கொடுத்து விடுவோம்.

மாநில, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் குழுக்களுடன் தேர்வு செய்யப்பட்ட வல்லுநர்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். இவர்களுக்கு விரைவில் பணி வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், திருப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x