Last Updated : 09 Dec, 2018 09:49 AM

 

Published : 09 Dec 2018 09:49 AM
Last Updated : 09 Dec 2018 09:49 AM

‘சிஃபாஸ்’ அமைப்பு சார்பில் சிங்கப்பூர் கலைஞர்களின் 3 நாள் கலை விழா; மியூசிக் அகாடமியில் இன்று நிறைவு

சிங்கப்பூர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் (சிஃபாஸ்) ‘அலங்கார்’ இசை, நாட்டிய விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று முன்தினம் ‘லய சங்கமம்’ நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் தலைவர் ராய் கோ குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

கோயில்களில் வழிபாடுகள், வீதிஉலாவின்போது மங்கள வாத்தி யமான தவில் - நாதஸ்வரத்தில் ‘தீர்த்த மல்லாரி’, ‘தளிகை மல்லாரி’, ‘பெரிய மல்லாரி’, ‘சின்ன மல்லாரி’ ஆகியவற்றை வாசிப்பார்கள்.

அதேபோல, ‘லய சங்கமம்’ நிகழ்ச்சியிலும் சிஃபாஸின் குரு திருப்பணித்துரா ஸ்ரீகாந்த் ஒருங் கிணைப்பில் அவரது சொல்கட்டு களுக்கு ஏற்ப, புல்லாங்குழல், சிதார், மிருதங்கம், தபேலா, சைனீஸ் டிரம், மலேசிய தாள வாத்தியம் ஆகியவற்றின் ஒத்திசை வோடு, கம்பீர நாட்டை ராகத்தில் மல்லாரியை வழங்கினர். தாள வாத்தியக் கலைஞர்கள் நிகழ்த் திய இந்த தாளசங்கமம் பிரம் மாண்டமாக அரங்கு முழுவதும் வியாபித்தது.

லய சங்கமம் நிகழ்ச்சி 5 முக் கிய அம்சங்களுடன் காதுகளுக்கு மட்டுமின்றி, கண்களுக்கும் விருந் தான நாட்டிய நிகழ்ச்சிகளுடன் விரிந்தது. தொடர்ந்து, டோனி மேகரமோமின் குயான்ஸாய் ஸியாங்ஸி இசைக்கோப்பை டிமோதி ஓட்வயர் சாக்ஸஃபோனில் வாசித்தார். மேற்குவங்கத்தின் கிராமிய இசையை ரித்யான் ஜலானி மலேசிய தாளவாத்தியத் தில் வாசித்தார். ஹிந்தோள ராகத்தில் அமைந்த பல்லவியும், சங்கராபரணம் ராகத்தில் ஹரி கேசநல்லூர் முத்தையா பாகவர் அமைத்த ஸ்வரஜதியும், சுவாதி திருநாளின் `புஜகசாயினோ’ மங்களமும் இசைக்கப்பட்டது.

ஜதிக்கோவைகளுக்கு ஏற்ப, பரதநாட்டியத்தில் மீரா பால சுப்ர மணியத்தின் அபிநயங்களும் குரு ஜோதிகா ஜோஷியின் `ஸ்பின்’னும் ஒரே மேடையில் பரதத்தையும், கதக்கையும் தரிசிக்கவைத்தன.

ஒருகட்டத்தில் ஜோதிகா தன் கால்களால் சொல்கட்டுகளை முன்மொழிய அதை குரு காந்த் கொன்னக்கோலில் வழிமொழிய அதை தாளவாத்தியக் கலைஞர்கள் தொடர்ந்த ‘ரிவர்ஸ் பிராசஸ்’ சிஃபாஸ் கலைஞர்கள் மேடையில் நிகழ்த்திய அரிய நிகழ்வு.

மியூசிக் அகாடமியின் கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் சிஃபாஸ் மாணவர்கள், மூத்த கலைஞர்களின் நிகழ்ச்சி இன்றும் காலை முதல் நடக்கிறது. இதற்கு கட்டணம் கிடையாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x