Published : 25 Dec 2018 11:35 AM
Last Updated : 25 Dec 2018 11:35 AM
உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை வரும் 2019 மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் ஃபெரோஸ் கான் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2016 அக்டோபரில் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு இருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், திமுக தொடர்ந்த வழக்கின் காரண மாக தள்ளிப்போனது. இந்நிலை யில் 2017 நவ.17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென உயர் நீதிமன் றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையம் அமல் படுத்தவில்லை எனக்கூறி திமுக சார் பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. இதேபோல வார்டு மறு வரையறை தொடர்பாக திமுக சார் பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் மாநிலத் தேர்தல் ஆணையரான எம்.மாலிக் ஃபெ ரோஸ்கான் ‘இந்து தமிழ்’ நாளிதழி டம் கூறியது: தமிழகத்தில் உள்ள மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு களுக்கு ஏற்கெனவே 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு இத் தனை ஆண்டுகள் கழித்து தற்போது தான் வார்டு மறுவரையறைப் பணிகள் பூகோள ரீதியாகவும், மக்கள் தொகை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு, கடந்த டிச. 15-ல் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் வார்டுகளின் எண் ணிக்கை எந்த விதத்திலும் குறைக் கப்படவில்லை.
தற்போது 12,524 கிராம ஊராட்சி கள், 388 ஊராட்சி ஒன்றியம், 31 மாவட்ட ஊராட்சி என கிராமப்புறங் களில் 12,943 தலைவர் பதவிகளுக் கும், ஒரு லட்சத்து ஆயிரத்து 450 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுபோல நகர்ப்புறங்களில் 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி என மொத்தம் 664 தலைவர் பதவிக ளுக்கும், 12 ஆயிரத்து 820 உறுப்பி னர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
இதேபோல நகர்ப்புறங்களில் மேயர், தலைவர் போன்ற பதவிக ளுக்கு நேரடித்தேர்தல் என அறிவிக் கப்பட்டுள்ளதால், மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக 2 மடங்கு தேவைப்படுகிறது. அவற்றை தயார்படுத்தும் பணிக ளில் ஈடுபட்டு வருகிறோம்.
வார்டு மறுவரையறை முடிந்து விட்டதால் அடுத்தகட்டமாக பெண் கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யின வார்டுகளை சரியாகக் கண்ட றிந்து இடஒதுக்கீடு வழங்க வேண் டும். இப்பணிகளை முடிப்பதற்கு எப்படியும் 6 வார காலம் தேவை. ஏனெனில் ஏற்கெனவே உள்ள மக் கள் தொகை பட்டியலும், தற்போது வார்டு மறுவரையறைக்குப்பின்பு உள்ள பட்டியலும் முற்றிலுமாக மாறுபட்டவை. அதன்படி இடஒதுக் கீடு பணிகள் முடிவடைவதற்கு 2019 பிப். முதல் வாரம் ஆகிவிடும்.
அதன்பிறகு நாங்கள் தயாரித் துள்ள வரைவு வாக்காளர் பட்டி யலை, இந்திய தேர்தல் ஆணையம் 2019 ஜனவரியில் வெளியிடும் பிரதான வாக்காளர் பட்டியலுடன் பொருத்திப்பார்த்து சரிபார்க்க வேண்டும். இந்த வாக்காளர் பட்டி யல் சரிபார்ப்பு பணியை ரூ. 12 லட் சம் செலவில் தேசிய தகவல் மையத் தின் (என்ஐசி) பொறுப்பில் ஒப்ப டைத்துள்ளோம். இப்பணி முடிவ டைவதற்கு 95 நாட்கள் தேவை என என்ஐசி தெரிவித்துள்ளது. இப்படி ஒவ்வொரு பணியையும் யாருமே கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அறிவியல் பூர்வமாக துல்லியமாக செய்து வருகிறாம்.
அதன்படி எப்படி பார்த்தாலும் வரும் மே முதல் வாரத்தில் தான் எங்களால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட இயலும். அதன்பிறகு 2 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப் பட்டு அனைத்துப் பதவிகளுக்கும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். இதற்கிடையே உயர் நீதி மன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தா லும் அதையும் ஏற்க வேண்டிய சூழலில் உள்ளோம் என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு முன்கூட்டியே வந்துவிட்டால் உள் ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதா என கேட் டதற்கு, உள்ளாட்சித் தேர்தலுக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் 2016-ல் எப்படி தயாராக இருந் தோமோ அதே நிலையில் தான் தற் போதும் இருந்து வருகிறோம், என் றார். மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT