Last Updated : 25 Dec, 2018 11:31 AM

 

Published : 25 Dec 2018 11:31 AM
Last Updated : 25 Dec 2018 11:31 AM

அதிமுக கூட்டணியில் பாமக? - மறைமுகமாக சீண்டும் ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக பாமக தலைமையை குறிப்பிட்டு பேசியிருப்பது, அதிமுக - பாமக இடையே கூட்டணி உருவாகி வருவதையே காட்டுகிறது என்று கூறப்படுகிறது.

செஞ்சியில் நேற்று முன்தினம் நடந்த திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "அறிக்கைகளை வெளியிடக்கூடிய சில தலைவர்கள், ஆளுங்கட்சியை குறை சொல்லும்போதெல்லாம் ஆண்ட கட்சியாக உள்ள நம்மையும் குறை சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். ஆளுங்கட்சி - ஆண்ட கட்சி என்றுதான் சில தலைவர்கள் சொல்கின்றனர். 'இனி ஆளவே முடியாது' என்ற நிலையில் உள்ளவர்கள் இதைக் கூறுவதுதான் வேடிக்கை'' என்று பாமகவை மறை முகமாக சாடினார்.

இதற்கிடையே கடந்த 22-ம் தேதி கோவை விமான நிலையத்தில், பாமக இளைஞரணி தலைவர் அன்பு மணி ராமதாஸ் செய்தியாளர்களி டம் பேசியபோது, "நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பாமக யாரிடமும் பேச தொடங்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப் பாட்டை கூறுவோம்'' என்றார்.

அதே நாள் பிற்பகல் விழுப்புரம் மாவட்டத்தில் பாமக தலைமைக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் "முதலமைச்சர் பழனிசாமி பாமக வுடன் கூட்டணியை பேசி முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரின் திட்டத்துக்கு அதிமுக புள்ளி ஒருவர், செயல் வடிவம் கொடுக்க முயற்சி மேற் கொண்டு வெற்றியும் பெற்றிருப் பதாகக் கூறப்படுகிறது.

விரைந்து டீலை முடிக்க விரும்பும்

'திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அடித்துச் சொன்னாலும். கூட்டணி இல்லாமல் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்துதான் இருக்கி றார். இதனால் தான் அன்புமணி அடிக்கடி கூட்டணி குறித்து பேசி வருகிறார். 6 மக்களவை தொகுதி கள், ஒரு மாநிலங்களவை உறுப்பி னர் என பேசி முடிக்கப்பட்டிருப் பதாக தகவல்கள் வெளியாகியுள் ளன. டாக்டரின் பதிலுக்காக காத்தி ருக்கிறார்கள். அதிமுக விரைவில் டீலை முடிக்க எண்ணுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, "அதிமுகவையும், பாஜக வையும் நேற்று முன்தினம் விமர்சித்த திமுக தலைவர் ஸ்டா லின், மறைமுகமாக பாமகவையும் விமர்சித்திருப்பதாக தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாமக உள்ள கூட்டணியில் இருக்க மாட் டோம் என்று உறுதிபட தெரிவித்து உள்ளார். அவர் கலைஞர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் பாமக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை" என்றார்.

இதுகுறித்து பாமக வட்டாரங் களில் விசாரித்தபோது, "அன்புமணி சொன்னதுதான் எங்களுடைய பதில். கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை.

தேர்தலின்போது பாமக நிலைப் பாடு தெரியவரும்'' என்று தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x