Published : 31 Dec 2018 11:14 AM
Last Updated : 31 Dec 2018 11:14 AM
மதுரை மல்லிகைப் பூவைப் போலவே இருக்கும் நந்தியா வட்டை பூக்களையும், காக் கரட்டான் பூக்களையும் சில் லறை வியாபாரிகள் மதுரை மல்லிகையுடன் கலந்து விற்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தின் மற்ற மாவட் டங்களில் மல்லிகை உற்பத்தி செய்யப்பட்டாலும், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் விளைவிக் கப்படும் மதுரை மல்லிகைக்கு இணையாக அவை வராது. இதனால், மதுரை மல்லிக்கு 2013-ம் ஆண்டு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கும் விமானத்தில் ஏற்றுமதி ஆகிறது. இந்நிலையில், சில ஆண்டாக மல்லிகையில் பூச்சித் தாக்குதலாலும், விலையில் நிலையற்ற தன்மையாலும் தென் மாவட்டங்களில் மல்லிகை சாகு படி முன்புபோல இல்லை.
இந்நிலையில், மல்லிகைக்கு மாற்றாக , அதைப்போலவே உள்ள நந்தியாவட்டை, காக்கரட்டான் பூக்களை மல்லிகையுடன் கலந்து சில்லறை வியாபாரிகள் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மதுரை பூ வியாபாரி ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
நந்தியா வட்டை பூக்களை போலி பூ எனக் கூறி விட முடியாது. மல்லிகையைப்போல அதுவும் ஒரு பூதான். இதில் 3 வகைகள் உள்ளன. இவை சிவனுக்கு உகந்தது என்பதால் பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது.
எந்த விவசாயியும் திட்டமிட்டு இந்தப் பூக்களை மல்லிகைக்கு மாற்றாக சாகுபடி செய்வதில்லை. மல்லிகையை விட விலை குறை வாக இருப்பதால் பெண்களே இந்த பூக்களை வாங்குகின்றனர்.
மதுரை பூ மார்க்கெட்டில் இந்த பூக்களை மல்லிகையுடன் கலந்து யாரும் விற்பதில்லை. மொட்டாக இருக்கும் நிலையில் இந்த பூக்களை பறித்தால் பத்து நாட்கள் ஆனாலும் அப் படியே பொலிவுடன் இருக் கும். தற்போது மல்லிகை சீசன் கிடையாது. அதனால், மல்லி கைக்கு மாற்றாகவே இந்தப் பூக் கள் பயன்படுத்தப்படுகின்றன. போலியாக அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதியிடம் கேட்டபோது, ‘‘நந்தியாவட்டை பூக்கள் சிறிதளவு நச்சுத் தன்மை உள்ளது. பெண்கள் ஏமாந்து போய் வாங்கினால்தான் உண்டு. அந்தப் பூக்களை யாரும் தலையில் சூடிக் கொள்ள மாட்டார்கள். பெங்க ளூருக்கும் மதுரை பகுதி யில் இருந்து அதிகளவு விற் பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பூக்கள் மொட்டாக இருக்கும் போது மல்லிகை மாதிரியே தோற்றமளித்தாலும், விரிந்தால் பூ மாதிரி ஆகிவிடும்.
காக்கரட்டான் பூக்கள், திண்டுக் கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிகளில் அதிகம் சாகுபடி ஆகிறது. வாசமில்லாத இந்த பூக்களும் மல்லிகை போலவே இருக்கும். இது 10 நாட்க ளானாலும் மொட்டாகவே இருக்கும். மல்லிகையில் ஒரு வகைதான் இதுவும். இந்த பூக்களை பார்த்தாலே சுலபமாக கண்டறிந்து விடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT