Published : 22 Sep 2014 09:29 AM
Last Updated : 22 Sep 2014 09:29 AM

சூரிய மின் சக்தி உற்பத்தி: தமிழக அரசின் உறுதிமொழி என்ன ஆனது? - திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

சூரிய மின் சக்தி உற்பத்தியில் தமிழக அரசின் உறுதிமொழி என்னவாயிற்று என்று, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சூரிய சக்தி மூலம், 2013ல் 1,000 மெகாவாட், 2014ல் 1,000 மெகாவாட், 2015ல் 1000 மெகாவாட் என்று மூன்று ஆண்டுகளுக்குள், 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் போவதாகப் பேரவையில் சொன்னார்கள். அறிவிப்பு செய்து இரண்டாண்டுகள் ஓடி விட்டன. தற்போது அதன் நிலை என்ன? 2012ல் 52 முதலீட்டாளர்களிடமிருந்து, 708 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடி வெடுத்து, அதை வாங்க 2013ம் ஆண்டு மார்ச்சில்தான் தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணைய அனுமதிக்காக விண்ணப்பிக்கிறார்கள்.

சூரிய சக்தி மின்சாரத்தை வாங்குவதற்கான விரிவான கட்டண ஆணையை, கடந்த வெள்ளிக்கிழமைதான் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், சூரிய சக்தி மின் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7.01க்கு வாங்க, மின் வாரியத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால், இந்த விலை தேசிய அளவில் ரூ.9.30க்கு மேல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை குறைவு என்று கூறி முதலீட்டாளர்கள், மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் முறையிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

மின்வாரியம் ஏற்கெனவே 52 முதலீட்டாளர்களிடமிருந்து, 708 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய அனுமதி கோரியிருந்தார்கள் அல்லவா. அந்த அனுமதியையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மறுத்ததுடன், அந்த மனுவையும் ரத்து செய்து,15-9-2014 அன்று உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதான், சூரிய மின் உற்பத்தித் திட்டத்தின் சோகமான வரலாறு.

தமிழக மின் வாரியத்தின் செயற்கையான கட்டுப்பாடு களால், சுமார் 20 சதவிகிதக் காற் றாலைகள் இயங்காமல் உள்ளன. இந்நிலையில், சில ஆண்டுகளாக அரசு கடைப்பிடிக்கும் விதிமுறை களால், ஓரிரு காற்றாலைகளை இயக்கி வரும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள். காற்றாலை நிறுவனங்கள் மின் சாரத்தை அரசுக்கு விற்றுவிட்டு, பணத்தைப் பெறுவதற்காக மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கி ன்றன. இவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு பேச வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x