Published : 18 Dec 2018 08:16 AM
Last Updated : 18 Dec 2018 08:16 AM
நீரின் கொள்ளளவைப் பொறுத்து மதகுகள் டிஜிட்டல் தொழில்நுட்பத் துடன் இயங்கும் வகையில் முக்கொம்பில் ரூ.387.6 கோடியில் புதிய அணை கட்டப்பட உள்ளது.
வெள்ளப் பெருக்கால், முக் கொம்பு மேலணையில் கொள்ளிடத் தின் தென் பகுதியில் இருந்த 9 மதகுகளும், தூண்களும் கடந்த ஆக.22-ம் தேதி பாலத்துடன் இடிந்து விழுந்தன. இதையடுத்து, அங்கு புதிய அணை கட்டப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதையடுத்து, பொதுப்பணித் துறை மூத்த அதிகாரிகள், ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் வல்லு நர்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ரூ.387.60 கோடியில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த சில நாட்க ளுக்கு முன்பு அரசாணை வெளியிட் டது. இது முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால், இதற்கான கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்ய சர்வதேச அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வரும் ஜன.30-ம் தேதி ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது. அதன்பின் ஒரு சில மாதங்களில் புதிய அணைக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலர், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: முக்கொம்பில் சர் ஆர்தர் தாமஸ் காட்டனால் கட்டப்பட்டு, சுமார் 182 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த அணையைவிட, வலுவுடனும், நவீன தொழில்நுட்பத்துடன் புதிய அணை இருக்க வேண்டும் என முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தற்போதுள்ள அணையின் கீழ் பகுதியில் சுமார் 75 மீட்டர் தூரத்தில் புதிய அணை அமைய உள்ளது. கொள்ளிடத்தின் தென் பகுதியில் 45 மதகுகள், வட பகுதியில் 10 மதகுகளுடன் அமையும் அணை யின் மேல்பகுதியில் இலகு ரக வாகனங்கள் செல்லும் வகையில் 3.7 மீட்டர் அகலத்தில் பாலத்துடன் கூடிய சாலை அமைக்கப்படுகிறது. வெள்ள நீரின் வேகம், அதிர்வு கள், இயற்கை பேரிடர் உள்ளிட் டவற்றைத் தாங்குவதற்காக தரையில் இருந்து 22 மீட்டர் ஆழத்துக்கு பைல் பவுண்டேஷன் மூலம் அடித்தளம் போடப்பட்டு, சுமார் 300 ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கும் வகையில் பாலம் கட்டப் படவுள்ளது.
முழுவதும் டிஜிட்டல் மயம்
தமிழ்நாட்டிலேயே முதல்முறை யாக இந்த அணை முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. அனைத்து மதகுகளிலும் 'ஹைட்ரோ மெக்கானிக்கல் ரெகு லேட்டர்கள்' பொருத்தப்பட்டு, அவை கணினியுடன் இணைக்கப்ப டும். இதற்காக அங்கு அமைக்கப் படும் கட்டுப்பாட்டு அறை மட்டும் இன்றி, பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்தும்கூட செல்போன் மூலம் இந்த மதகுகளை இயக்க முடியும். கொள்ளளவாக பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள நீரின் அளவைத் தாண்டி, சிறிதளவு அதிகமாக வந்தா லும்கூட மதகுகள் தானாகத் திறந்து நீரை வெளியேற்றிவிடும் வகையில் இவை வடிவமைக்கப்பட உள்ளன.
புதிய அணை கட்டி முடிக்க 2 ஆண்டு ஆகலாம் என்பதால், ரூ.40 கோடி செலவில் தற்காலிக தடுப்பணை அமைக்கப்பட உள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT