Published : 12 Dec 2018 10:28 AM
Last Updated : 12 Dec 2018 10:28 AM
இலவச அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறையை ஆளுநர் அனுமதியுடன் புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 பிராந்தியங்களிலும் உள்ள 507 ரேஷன்கடை கள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் 800 ஊழியர்களும் மாற்றுப்பணி வழங்க கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 507 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் பாப்ஸ்கோவின் கீழ் 47, தனியார் 26 கடைகளையும் நடத்தி வருகின்றன. மீதியுள்ள கடைகள் கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இதில் 800 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். புதுச்சேரியில் ரேஷனில் இலவச அரிசி மட்டுமே விநியோகிக்கப்படு கிறது. அதுவும் கடந்த சில வருடங்க ளாக மாதந்தோறும் சரியாக விநியோகிக்கப்ப டவில்லை. மேலும் ரேஷன்கடை ஊழியர்களுக்கு 18 மாதங்களாக ஊதியமும் தரப்படவில்லை.
இந்நிலையில் தீபாவளியையொட்டி இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் இரு மாதங்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட தால் மீண்டும் ரேஷன் கடை இயங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “புதுச்சேரியில் ரேஷனில் இலவச அரிசியை சரியாக தருவதில்லை. இலவச அரிசி தரும் கோப்புக்கு ஆளுநர் அனுமதி தருவதில்லை என்று முதலில் ஆளுங்கட்சியினர் புகார் தெரிவித்தனர். அதேநேரத்தில் இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் தருவதாக கோப்பு அனுப்பினால் அதற்கு ஆளுநர் உடனே அனுமதி தந்து விடுகிறார். அதனால் புதுச்சேரியில் இனி ரேஷன் கடைகள் இயங்குமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது” என்கின்றனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்கள் சங்க தலைவர் லட்சுமணசாமியிடம் கேட்டதற்கு, “18 மாதங்களாக ஊதியம் தரவில்லை. 800 ஊழியர்களும் பாதிப்பில் உள்ளனர். பல போராட்டங்கள் நடத்தி விட்டோம்.
ஆளுநர், முதல்வர், அமைச்சர், துறை அதிகாரிகள் என பலரிடமும் முறையிட்டு விட்டோம். ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ரேஷன்கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கினால் அதற்கான நிதியை அளிப்பதாகவும் மத்திய அரசு கடந்த 2015-ல் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் அதையும் செய்யாமல் ஊதியமும் தராமல் ரேஷன் கடைகளை வைத்துள்ளனர். அரிசிக்கு பதிலாக பணம் வழங்க அரசு முடிவு எடுக்குமானால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசுத்துறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். சங்க துணைத் தலைவர் நடராஜன் கூறுகையில், “சண்டிகரில் ரேஷன்கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி தரப் பட்டுள்ளது.
அதேபோல் இங்கும் தரலாம். இரவு உணவு சாப்பிட முடியாமல் தான் எங்கள் பணியாளர்களின் குடும்பங்கள் உள்ளன. ரேஷன்கடைகளை மூடுவதாக இருந்தால் அரசும், ஆளுநரும் நினைத்தால் உடனே மாற்றுப்பணி தர முடியும்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT