Published : 07 Dec 2018 04:35 PM
Last Updated : 07 Dec 2018 04:35 PM
சட்ட விவரங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு இருவாரங்களுக்கு பிறகு தேர்வு நடத்தப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நாள்தோறும் துறை தோறும் ஆய்வுகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்து வருகிறார். அனைத்து துறைகளிலும் துறை சார்ந்த சட்ட விவரங்களை அறிந்து கொள்ள அறிவுறுத்தி வருகிறார். புதுச்சேரி சமூக நலத்துறையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் அதிகாரிகளுக்கு சட்ட விவரம் தொடர்பாக தேர்வு வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுக்கு தேர்வு தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "துறை சார்ந்த சட்டவிதிகளை அதிகாரிகள் கற்று அறிவது அவசியம். அது மாதிரி தேர்வுக்கு உட்படுத்தப்படும். குறிப்பாக பல துறைகளிலுள்ள மூத்த அதிகாரிகளுக்கு சட்ட விவரங்கள் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும். பலர் அதை அறிவதில்லை. இரு வார அவகாசம் தந்துள்ளேன். அதற்குள் தேர்வுக்கு அதிகாரிகள் தயாராக வேண்டும். எனது தனிச்செயலர் ஸ்ரீதரன் இத்தேர்வை நடத்த உள்ளார்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT