Last Updated : 10 Dec, 2018 09:32 AM

 

Published : 10 Dec 2018 09:32 AM
Last Updated : 10 Dec 2018 09:32 AM

உளவு பிரிவு மூலம் சென்னை காவல் ஆணையர் கண்காணிப்பு: செயல்படாத துணை ஆணையர்கள் விரைவில் மாற்றம்

சென்னையில் திறமையாக செயல் படாத துணை ஆணையர்கள் விரைவில் மாற்றம் செய்யப்படு வார்கள் என்று கூறப்படுகிறது.

சென்னையில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, வழிப் பறி உள்ளிட்ட குற்றங்கள் ஆங் காங்கே நடந்து வருகின்றன. இவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து, கடந்த மாதத்தில் மூன்றே நாட்களில் திருடர்களிடம் இருந்து 2,500 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் பொது இடங்க ளில் 1.50 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. ஆனாலும், செல்போன், செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது தொடர்பாக சில காவல் நிலையங் களில் புகார்தாரர்கள் அலைக்கழிக் கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப் பட்ட காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளுமாறு ஆணையர் அறிவுறுத்தினார். அதன் படி, பூக்கடை, வண்ணாரப் பேட்டை, மாதவரம், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப் பூர், அடையாறு, தி.நகர், பரங்கி மலை, அண்ணா நகர், புளியந் தோப்பு, அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களும் தினமும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

உளவு பிரிவில் ஒரு பிரிவான நுண்ணறிவு பிரிவு போலீஸார் இவர்களைக் கண்காணித்தனர். இவ்வாறு கடந்த மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை கண் காணிக்கப்பட்டதில் மாதவரம், புளியந்தோப்பு துணை ஆணையர் கள் 25 நாட்களும் அம்பத்தூர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர்கள் 24 நாட்களும் ஆய்வு செய்தது தெரியவந்தது.

ஆனால், அடையாறு துணை ஆணையர் 7 நாட்களும், திருவல்லிக்கேணி, தி.நகர் துணை ஆணையர்கள் 9 நாட்களும் மட்டுமே ஆய்வு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் கூறியபோது, ‘‘கண்காணிப்பு கேமரா இல்லாத இடங்களை நேரடி யாக சென்று ஆய்வு செய்யவும், காவல் நிலையம் சென்று ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. அதன்படி செய்கிறோம். சில நேரம் விஐபிக்கள் பாது காப்பு, முதல்வர் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆய்வு மேற்கொள்ள இயலவில்லை’’ என்றனர்.

நுண்ணறிவு பிரிவினர் மூலமாக துணை ஆணையர்களின் செயல் பாடுகளை ஆணையர் கண் காணித்து வருகிறார். திறமையாக செயல்படாத அதிகாரிகள் விரை வில் மாற்றம் செய்யப்படக் கூடும் என்று காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் கூறுகின் றனர்.

இதற்கிடையில், துணை ஆணையர்கள் அதிக அளவில் ஆய்வு நடத்திய இடங்களில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள் ளதாகவும், அப்பகுதிகளில் குற்றவாளிகள் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. செல்போன், நகைகளை பறிப்ப வர்கள், திருடுபவர்கள் மட்டுமல் லாமல், அந்த திருட்டு செல்போன், நகைகளை வாங்குபவர்களையும் கண்டறிந்து சிறையில் அடைத்தால், குற்றங்கள் முற்றிலும் குறையும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x