Published : 15 Dec 2018 08:17 AM
Last Updated : 15 Dec 2018 08:17 AM
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முதுமலை தெப்பக்காட்டில் 2003-ல் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கப்பட்டது. 2012-ல் இந்த முகாம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டிக்கு மாற்றப்பட்டது. அங்கு பவானி ஆற்றங்கரையில் 7-வது ஆண்டாக புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது.
இதில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் இருந்து 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இதில் 27 யானைகள் வந்துவிட்ட நிலையில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ் வரி கோயில் யானை அகிலா, அக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி இரு நாட் களுக்குப் பிறகு முகாமுக்கு வந்துசேரும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நேற்று காலை நடைபெற்ற முகாம் தொடக்க விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஜி.சீனிவாசன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அறநிலையத் துறை ஆணையர் தா.கி.ராமச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் த.நா.ஹரிஹரன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஹெச்.மல்லேசப்பா, முதன்மை தலைமை உயிரினப் பாதுகாவலர் டி.பி.ரகுநாத், சார் ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர் களிடம் கூறும்போது, "கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் 48 நாட்கள் நடைபெறும். இதில், யானைகளுக்கு சத்தான உணவு, மருந்து மற்றும் பாகன் களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும், மகிழ்வுடன் வைத் திருக்க வேண்டுமென்பதற்காகத் தான் இந்த முகாம் நடத்தப்படுகிறது. வனத் துறை கட்டுப்பாட்டில் முதுநிலை, பொள்ளாச்சி, கோவை, சேலம், வண்டலூரில் உள்ள 52 யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தனியாக நடத்தப்படும்" என்றார்.
5 கி.மீ. நடைபயிற்சி
முகாமில் பங்கேற்றுள்ள யானை கள் காலையில் நடைபயிற்சி மேற் கொள்கின்றன. பின்னர், பவானி ஆற்றங்கரையில் அமைக்கப் பட்டுள்ள பிரத்யேக ஷவர்களில் ஆனந்தமாய் குளிக்கின்றன. யானை களுக்கு கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி பசுந்தீவனங்கள், பழங்கள், அரிசி, கொள்ளு, பாசிபருப்பு உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட உணவு, வெல்லம், கருப்பட்டி, குளுக்கோஸ், பல்வேறு சூரணங்கள், மருந்துகள், சத்து மாத்திரைகள், உப்பு, மஞ்சள், கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படு கின்றன. காலை, மாலை நேரங்களில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.
யானைப் பாகன்கள் உற்சாக மடையும் வகையில் பொழுது போக்குக் கூடம், விளையாட்டு களமும் அமைக்கப்பட்டு, யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு யானைக்கும் தினமும் சுமார் ரூ.10,155 செலவளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT