Published : 31 Dec 2018 08:14 AM
Last Updated : 31 Dec 2018 08:14 AM
தமிழகம் முழுவதும் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வரவுள்ள நிலையில், தடையை மீறி பயன்படுத்தினால் அந்த பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்வது என உள்ளாட்சி அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதாக, உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் 5-ம் தேதி, சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.
அதை முறையாக செயல் படுத்த தலைமைச் செயலர் தலைமையில் வழிகாட்டுக் குழு மற்றும் 6 மண்டலங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகளாக 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு நியமித்தது.
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் பல்வேறு உயர்மட்டக் கூட்டங்களை நடத்தி விவாதித்தும், தடையை மீறுவோருக்கான தண்டனை விவரங்களை இதுவரை முடிவு செய்யவில்லை.
சென்னை மாநகராட்சி நிர் வாகம் சனிக்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பிளாஸ் டிக் தடையை அமல்படுத்த மண்டல மற்றும் வார்டு அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழுக்கள் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்ய இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமி ழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சிகளும் இவ்வாறே திட்ட மிட்டுள்ளன.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது தொடர்பான கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் பேசியதாவது:
குழப்பம் இருக்காது
மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கூட பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்களுக்கு அவகாசமோ, தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு என்ன மாற்று என்பது குறித்தோ தெரிவிக்காமல் அமல்படுத்தியதால், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.
ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, அவற்றுக்கு மாற்று இருப்பதால் ‘தவிர்க் கக்கூடிய பிளாஸ்டிக் பொருள்’ என்றே தெளிவாக குறிப்பிட்டுள் ளது.
மேலும் பொதுமக்களுக்கும், உற்பத்தி நிறுவனங்களுக்கு 6 மாதங் கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் குழப்பமே இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் அச்சம் காரணமா?
இது குறித்து தியாகராய நகரைச் சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறும்போது, “பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அதே 6 மாத அவகாசம், அவர் களுக்கும் இருந்தது. அந்த 6 மாதத்தில் தண்டனை விவரங்களை முடிவு செய்திருக்கலாம். ஆனால் இதுவரை தண்டனை விவரங்களை அரசு அறிவிக்காமல் இருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் மக்கள் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி வந்த நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதன் தாக்கம், வரவிருக்கும் மக்களவை மற்றும் 20 சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல்களில் பிரதிபலிக்குமோ என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டி ருக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் தண்டனை விவரங்களை அறிவிக்கத் தயங்குகிறது” என்ற னர்.
தாமதம் ஏன்?
இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மாநிலம் முழுவது ஒரே சீரான தண்டனை முறையை உருவாக்க வேண்டி இருப்பதால், தாமதமாகிறது. அந்த தண்டனை விவரங்களை, அந்தந்த உள்ளாட்சி களில் மன்றத் தீர்மானமாக நிறை வேற்றிய பின்னரே செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.
அதுவரை விழிப்புணர்வு மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம். சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை இருப்பு வைத்திருப்போர் அந்தந்த வார்டு அலுவலகங்களில் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றனர்.
விழிப்புணர்வு பிரச்சாரம்
பிளாஸ்டிக் தடை தொடர்பாக வும், அவற்றுக்கான மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் அனைத்து மாவட் டங்களிலும் தலா 20 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி களை அரசு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமை இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கி யது. அதற்காக ரூ.64 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எந்தப் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்பது குறித்த விவரமே தெரியவில்லை என்று தடையை அமல்படுத்தும் அமைப்புகளான சென்னை மாநகராட்சி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT