Published : 31 Dec 2018 08:05 AM
Last Updated : 31 Dec 2018 08:05 AM

தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையான சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டம்; திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்

தமிழகத்தின் பிரதான சாலையான சென்னை - கன்னியாகுமரி 705 கிமீ தேசிய நெடுஞ்சாலை 8 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகி றது. மொத்தம் 2 கோடியே 56 லட் சத்து 61,847 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சத்து 86,210. இது மொத்த வாகனங்களின் எண்ணிக் கையில் சுமார் 82 சதவீதமாகும். ஒரே ஆண்டில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10 முதல் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனிடையே துறைமுக விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற் கான பணிகளும் நடந்து வருகின் றன. இதனால் போக்குவரத்து கட்டமைப்பு வசதியை மேம்படுத்த சாலை விரிவாக்க பணிகளும் நடந்து வருகின்றன.

இதன்படி, தமிழகத்தின் பிரதான சாலையான சென்னை கன்னியா குமரி 705 கிமீ தேசிய நெடுஞ் சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த சாலையை 8 வழிச் சாலைகளாக மாற்றவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக் கும் பணி தற்போது தொடங்கி யுள்ளது.

இதுதொடர்பாக தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கன்னியாகுமரி 4 வழி சாலையை 8 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கான சாத்தியக் கூறுகள், நிலம் அளவு, சிறு பாலங்கள் அமைப்பது, திட்டமதிப்பீடு உள்ளிட்ட விபரங் கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். நிலம் பிரச்சி னையாக இருக்கும் இடங்களில் உயர்மட்ட சாலைகளாக அமைக்க வுள்ளோம். இதற்காக, காஞ்சி புரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, நாகர்கோவில் ஆகிய பகுதி களில் நெடுஞ்சாலையை சேர்ந்த பொறியியல் துறை உயர் அதிகாரி கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 6 மாதங்களில் நிறைவடையும். அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக போக்குவரத்து மற்றும் நகரியல் பொறியியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘சாலைத் திட்டங்களை விட, ரயில்வே திட்டங்களை அதிகரிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாது காப்பு, எரிசக்தி சேமிப்பு, சாலை விபத்து குறைப்பது உள்ளிட்டவற்றை ஒப்பிடும் போது சாலை போக்கு வரத்தை விட, ரயில் போக்கு வரத்து மிகவும் சிறந்தது. நிலம் கையகப்படுத்துவதிலும் அதிகள வில் சிக்கல் இருக்காது. பெரிய அளவில் விவசாயம், இயற்கை பாதிக்காது. மக்களும் ரயில்களில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம். எனவே, மத்திய, மாநில அரசுகள் ரயில் திட்டங் களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x