Published : 18 Dec 2018 08:15 AM
Last Updated : 18 Dec 2018 08:15 AM
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இ-சேவை மையங்கள் மூலமாக புதிய ஸ்மார்ட் கார்டுகள் விநி யோகம் செய்வது நிறுத்தப்பட்டுள் ளது. ஜனவரியில் இருந்து அந்தந்த மாவட்ட வழங்கல் அலுவலகங் களிலேயே ஸ்மார்ட் கார்டு வழங் கும் வசதி ஏற்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 1.94 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் ரேஷன் கார்டுகள் இருந்த நிலை யில், போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், பொது விநியோகத் திட்டத்தில் பொருட்கள் வழங்கு தலை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி, புழக்கத்தில் இருந்த புத்தக வடிவிலான ரேஷன் கார்டுக ளுக்குப் பதிலாக ஏடிஎம் கார்டு வடிவிலான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. தற் போது தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை திருத்தம் செய்தல் உள்ளிட்டவை அரசின் இ-சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப் பட்டு வந்தது. இந்நிலையில், இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகரித் தது. குறிப்பாக, திருத்தங்கள் கோரி பலரும் விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு முறையும் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் கட்டுப்பாடற்ற நிலை ஏற்பட்டது. எனவே, இனி மாவட்ட வழங்கல் அலுவலகங்களின் மூலம் ஸ்மார்ட் கார்டுகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரேஷன் கார்டு கோரி விண்ணப் பிப்பவர்களுக்கு இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, சென்னையில் மட்டுமே ஸ்மார்ட் கார்டு தற்போது அச்சிடப்பட்டு அனைத்து மாவட்ட மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகி றது.
எனினும், அனைத்து மாவட்டங் களுக்கும் தேவையான ஸ்மார்ட் கார்டுகளை அவ்வப்போது அச் சிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதும் கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தி வருகிறது.
திருத்தப்பட்ட கார்டு கிடையாது
எனவே, ஒவ்வொரு மாவட்டத் திலும் உள்ள வழங்கல் துறை அலுவலகத்தில் ஸ்மார்ட் கார்டு அச்சிடும் வசதியை ஏற்படுத்தி, மாவட்டத்துக்கு தேவையான ஸ்மார்ட் கார்டுகளை அவ்வப்போது வழங்க அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. ஜனவரியில் இருந்து மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு ஸ்மார்ட் கார்டு பிரிண்டர் வசதி ஏற்படுத்தப்படும். மேலும், ரேஷன் கார்டு விவரத்தில் திருத்தங்கள் கோரி பெறப்படும் மனுக்களுக்கு இனி திருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாது.
அதற்குப் பதிலாக, திருத்தங்கள் கோருபவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, உரிய திருத்தங்கள் கொண்ட பக்கத்தை பிரிண்ட் எடுத்து, அதையே ஆவண மாக பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒருமுறை ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டவர்களுக்கு, அதில் மீண்டும் திருத்தங்கள் செய்து மறு கார்டு வழங்கப்படாது. இவ்வாறு மாவட்ட வழங்கல் துறை அதிகாரி கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT