Published : 10 Dec 2018 09:35 AM
Last Updated : 10 Dec 2018 09:35 AM
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானா லும் வரலாம் என்பதால், பெரம்பூர் தொகுதியில், சுவர்களை பிடித்து சின்னம் வரையும் பணியில் கட்சி கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறி விக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. அமுமுக சார்பில் பி.வெற்றிவேல் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதிமுக சார் பில் போட்டியிட மதுசூதனனின் ஆதரவாளரும் கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்ட செயல ருமான ஆர்.எஸ்.ராஜேஷ் முயன்று வருகிறார். கடந்த தேர்தலின்போது, திமுக அணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட என்.ஆர்.தனபாலனும் முயன்று வருகிறார்.
அதே நேரத்தில் திமுக ஆதரவுடன் போட்டியிட இடதுசாரி கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அதிமுக, திமுக, அமுமுக ஆகிய கட்சிகள் 15 நாட்களுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. குறிப்பாக சுவர் பிடிப்பதில் இந்த 3 கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. அப்பகுதியில் உள்ள சுவர்கள் கட்சி சின்னங்களோடு காட்சியளிக்கின்றன.
இதுதொடர்பாக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவர் கூறும்போது, "தேர்தல் வருகிறதோ இல்லையோ, முத லில் சுவர்களை பிடித்து சின் னத்தை வரையுமாறு உத்தரவிடப் பட்டுள்ளது. அந்த பணியில் மும் முரமாக ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
தடை விதிக்க வேண்டும்
‘‘சில இடங்களில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் சுவர்களை சமமாக பங்கிட்டுக் கொள்கின்றன. மேலும் வீட்டின் உரிமையாளர் அனுமதி இன்றி சுவரில் கட்சி சின்னங்களை வரைந்துவிடுகின்றனர். மாநகராட்சி மற்றும் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், மயானச் சுற்றுச்சுவர் மற்றும் பாலங்கள் ஆகியவை கூட தப்பவில்லை. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சுவர்களில் கட்சி சின்னம் வரைய தடை விதிக்க வேண்டும்’’ என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மாநகராட்சி சுவர்களில் உள்ள சின்னங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT