Last Updated : 05 Dec, 2018 11:20 AM

 

Published : 05 Dec 2018 11:20 AM
Last Updated : 05 Dec 2018 11:20 AM

வீட்டில் நள்ளிரவில் புகுந்த பாம்பு: போன் எடுக்காத வனத்துறை;  முதல்வரிடம் புகார் தந்து நடவடிக்கை

புதுச்சேரியில் நள்ளிரவில் வீட்டில் விஷப்பாம்பு புகுந்ததால் வனத்துறையை தொடர்பு கொண்டபோது தொலைபேசி எடுக்காததால் முதல்வரின் செல்பேசியில் புகார் தந்த சம்பவம் நடந்தது.

புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளியில் வீட்டில் நள்ளிரவில் விஷப்பாம்பு புகுந்துள்ளது. அப்போது வீட்டில் இருந்த விஜயா, குழந்தைகள் வசந்த், சந்தியா ஆகியோர் பயந்து போனார்கள். சுமார் ஐந்தடி நீளமுள்ள பாம்பு என்பதால் உடனடியாக உயிருக்கு பயந்து வனத்துறைக்கு தகவல் தர பலமுறை தொடர்பு கொண்டனர். ஆனால், யாரும் அழைப்பை எடுக்கவில்லை.

இதையடுத்து நள்ளிரவு 1 மணியளவில் முதல்வர் நாராயணசாமியை செல்போனில் அழைத்து விஷப்பாம்பு புகுந்ததால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், வனத்துறை தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டும் யாரும் எடுக்கவில்லை என்றும் முறையிட்டனர்.

இதையடுத்து வனத்துறை அதிகாரிக்கு முதல்வர் நாராயணசாமி போனில் நள்ளிரவில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதையடுத்து வனத்துறை ஊழியர்கள் கோபி, தாமரைச்செல்வன் ஆகியோர் மணவெளி சென்று விஷப்பாம்பை பிடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x