Published : 07 Dec 2018 02:56 PM
Last Updated : 07 Dec 2018 02:56 PM

மனைவியுடன் தகராறு: 2 பெண் குழந்தைகளைக் கொன்று தந்தை தலைமறைவு

கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2 பெண் குழந்தைகளைக் கொன்று தலைமறைவானவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (45). இவர் மார்க்கெட்டிங் பிரதிநிதி. இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15), ஜீவா (8) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 10 மற்றும் 3 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில், கணவன்  மனைவி இடையே  கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து பிள்ளைகளை வீட்டில் விட்டு செல்வராணி கோபித்துக் கொண்டு வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு  சென்று விட்டார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்தி அனுப்புவதற்காக வீட்டுக்கு வந்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த குழந்தைகள் படுக்கையில் இறந்து கிடந்தனர். பத்மநாபன் வீட்டில் இல்லை.

இதையடுத்து செல்வராணி சிங்காநல்லூர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x