Published : 02 Dec 2018 11:15 AM
Last Updated : 02 Dec 2018 11:15 AM

மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதை தடுக்க தமிழகத்தில் நீர்வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: ஓய்வுபெற்ற பொறியாளர் ஏ.சி.காமராஜ் அரசுக்கு யோசனை

மேகேதாட்டுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதைத் தடுக்க, நீர் வழிச்சாலைத் திட்டத்தைச் செயல் படுத்தினால் மேட்டூர் அணையைப் போல் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவு தண்ணீரைத் தேக்கலாம் என நீர்வழிச்சாலைத் திட்டப் பொறியா ளர் ஏ.சி.காமராஜ் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத் துக்கு தண்ணீர் கிடைப்பது மிகச் சிரமம். புதிய அணை கட்ட கர்நாடகா சொல்லும் காரணம், தமிழகத்துக்குக் கொடுக்கும் தண் ணீரை கடலில் விட்டுவிட்டு மீண்டும் எங்களிடம் தண்ணீர் கேட்கிறார்கள் என்பதே.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறைப் பொறியாளரும் நதிகள் இணைப்புக்கான இந்திய அரசின் உயர் மட்டக்குழுவின் உறுப்பினரு மான ஏ.சி.காமராஜ், நீர் வழிச்சாலை களுக்கான திட்ட அறிக்கையை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது: தண்ணீர் பிரச்னைக்கு ஒரே தீர்வு நீண்ட நீர்த்தேக்கமாக அமையும் தமிழக நீர்வழிச்சாலைதான். தமிழகத்தில் பாலாறு முதல் தாமிர பரணி வரை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் அனைத்து முக்கிய ஆறுகளையும் (காவிரி உட்பட) இணைத்து, வடக்கு தெற்காக ஒரே மட்டத்தில் 900 கி.மீ. நீளத்துக்கு நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை அமைக்கலாம். இதன் மூலம் தண்ணீரைத் தேக்கவும், ஒரு ஆற்றில் இருந்து எந்த ஆற்றுக்கும் கொண்டு செல்லவும் முடியும்.

நவீன நீர்வழிச்சாலை அமைந்தி ருந்தால் கடலுக்குச் செல்லும் தண் ணீரைத் தேக்கி தேவையான பகுதி களுக்குக் கொடுத்திருக்கலாம். கர் நாடகா 66 டிஎம்சி தண்ணீரை தேக்கு வதற்காக மேகேதாட்டுவில் அணை கட்டத் திட்டமிடுகிறது. நவீன நீர் வழிச்சாலையில் அதைவிட அதிகம் தண்ணீரைத் தேக்க முடியும்.

தற்போது, கர்நாடக அரசு மேகே தாட்டுவில் அணை கட்டச் சொல்லும் காரணத்தை முறியடிக்கும் வகை யில் நாம் திட்டம் வகுக்க வேண் டும். அதற்கு சரியான தீர்வு, தமிழ் நாடு நவீன நீர்வழிச்சாலைத் திட்டம். இந்தத் திட்டத்தில் காவிரியில் கிடைக்கும் வெள்ள நீர் முழுவதை யும் தேக்கிப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது இந்தத் திட்டத் தில் மேட்டூர் அணையில் எவ்வளவு தண்ணீரைத் தேக்க முடியுமோ அந்த அளவுக்கு அதிகமாகத் தண்ணீரை தேக்கலாம். இதில் இருந்து காவிரிக்கோ பாலாறுக்கோ, வைகைக்கோ தண்ணீர் கொடுக்க முடியும். குடிநீருக்கும் விவசாயத் துக்கும் வேண்டிய அளவு தண்ணீர் கிடைக்கும்.

ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் இருந்து எல்லா ஆறுகளிலும் சுமார் 177 டிஎம்சி தண்ணீர் கடலுக்குச் செல்வதாக விஜயராகவன் குழு கூறியுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 10 டிஎம்சி தேக்கக்கூடிய நீர்த்தேக்கம்கூட கட்ட வில்லை. அதனால், மேகேதாட்டு வில் கர்நாடக அரசு அணை கட்டு வதைத் தடுக்க நவீன நீர்வழிச் சாலைத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x