Published : 16 Jan 2014 04:33 PM
Last Updated : 16 Jan 2014 04:33 PM

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை: திமுக தலைவர் கருணாநிதி பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்க வில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில், திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் வியாழக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம்பெறும் என்று மமக செயற்குழு முடிவெடுத்ததை கருணாநிதியிடம் தெரிவித்தனர்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி பதிலளிக்கையில், “தமிழகத்தில் 2 திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப் பினர்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. அதற்கான தேர்தல் பிப்ரவரி 7ம் தேதி நடை பெறவுள்ளது. அந்தத் தேர்தலில் திமுக போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

திமுக, தேமுதிக கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. எனவே பேச்சு வார்த்தையில் முன்னேற்றமா என்ற கேள்விக்கே இடமில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்று இருந்தால்தான் அதைப் பற்றி பேசமுடியும்” என்று கருணாநிதி பதிலளித்தார்.

'மதவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணி'

முன்னதாக மமக மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவா ஹிருல்லா நிருபர்களிடம் கூறும் போது, ’வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைத் தலைமையாகக் கொண்ட மதவாத சக்திகள் வெற்றி பெறக்கூடாது என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, திமுக கூட்டணியில் மமக இடம்பெறும். எங்கள் மதச் சார்பற்ற கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்’ என்றார்.

மதவாத சக்திகள் வெற்றி பெறக்கூடாது என்பதற்கான முயற்சி களை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, திமுக கூட்டணியில் மமக இடம்பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x