Last Updated : 30 Dec, 2018 09:03 AM

 

Published : 30 Dec 2018 09:03 AM
Last Updated : 30 Dec 2018 09:03 AM

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை; மக்களிடம் எழுச்சி இல்லாததால் நோக்கம் நிறைவேறுமா?- குமரி மாவட்டத்தை பின்பற்ற சமூக ஆர்வலர்கள் யோசனை

தமிழகம் முழுவதும் வரும் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது. ஆனால், மக்களிடையே போதிய விழிப்புணர்வும், தன்னெழுச்சி யும் ஏற்படாததால் அரசின் நோக்கம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2010-ல் ஆட்சியராக ராஜேந்திர ரத்னூ இருந்த போது, பிளாஸ்டிக் தடை அங்கு சிறப் பாக அமல்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் பைகள், டீ கப், ஜவுளி பைகள், உணவ கங்களில் சாம்பார், மோர், ஜூஸ் கொடுக் கப்படும் பைகள் உள்ளிட்ட பொருட் களின் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

தொடர் கண்காணிப்பு

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்த தடை அமலுக்கு கொண்டுவரப்பட்டது. தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கல்விக் கூடங்கள், வழி பாட்டுத் தலங்கள், தன்னார்வ அமைப்பு கள், வர்த்தக அமைப்புகள், மகளிர் குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து அரசு அலுவலகங்கள் என்று எங்கு நோக்கினும் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து பேசப்பட்டது.

`பிளாஸ்டிக் இல்லா கன்னியாகுமரி’ என்ற இணைய பக்கத்தை உருவாக்கி, பிளாஸ்டிக் தவிர்ப்பு நடவடிக்கைகளை ராஜேந்திர ரத்னூ கொண்டு சென்றார். இந்த இணைய பக்கத்தில் வந்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் மத்தியில் ஏற்பட்ட தன்னெழுச்சியால் கடைக்கு சென்றவர்கள் துணிப்பைகளை எடுத்துச் சென்றனர். பூக்கடைகளிலும், இறைச்சி கடைகளிலும், வாழை அல்லது தாமரை இலைகளில் பொதிந்து அளித்தனர். உணவகங்களுக்கு பலர் பாத்திரங்களை எடுத்துச் சென்றனர்.

இதன் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சிறப்பு இலச்சினையை (லோகோ) உருவாக்கி, மக்கள் கூடும் இடங்களில் ஒட்டிவைத்தது. ஒட்டுமொத்த மக்களின் ஒத்துழைப்புடன் இம்மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை முழுமையாக அமலுக்கு வந்தது. ஆனால், நாளடைவில் ஆட்சியர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது குமரி மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

கண் துடைப்பு நடவடிக்கை

தமிழகம் முழுவதும் வரும் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையை அரசு அறிவித்துள்ளது. அதி காரிகள், அவ்வப்போது கடைகளுக்கு சென்று சோதனையிட்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தும், அப ராதம் விதித்தும் வருகின்றனர். ஆனால், நடைமுறையில் கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறையவில்லை. மக்கள் மத்தியிலும் துணிப்பைகளை கடைகளுக்கு எடுத்துச் செல்லும் நடைமுறை வழக்கத்துக்கு வரவில்லை. இதனால் அரசின் நோக்கம் நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, பிளாஸ்டிக் தடையை முழு அளவில் அமல்படுத்த 2010-ம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட் டத்தில் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கை களை முன்மாதிரியாக கொள்ளலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x