Published : 20 Dec 2018 09:50 AM
Last Updated : 20 Dec 2018 09:50 AM
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன் படுத்துவதற்கான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர வுள்ள நிலையில், அதை மீறு வோருக்கான தண்டனை விதி களை அரசு இன்னும் அறிவிக்க வில்லை. அதனால் பிளாஸ்டிக் தடையை எப்படி அமல்படுத்துவது என தெரியாமல் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட ஆண்டறிக்கையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 2 லட்சத்து 5 ஆயிரத்து 724 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாவதாகவும், அதை மேலாண்மை செய்வதற்கான செயல்திட்டத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு நிலவரப்படி தினமும் 4 ஆயிரத்து 500 டன் குப்பைகள் உருவாவதாகவும், அதில் 9.54 சதவீதம் (425 டன்) பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஒருமுறை பயன் படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ் டிக் பொருட்களை பயன்படுத் தவும், வைத்திருக்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்து கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த தடை, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இன்னும் 11 நாட்கள்
இந்த தடை குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்தும் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் தடை அமலுக்கு வர இன்னும் 11 நாட்களே உள்ளன.
ஆனால், இந்த தடையை மீறுவோருக்கு என்ன தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அரசு இன்னும் அறிவிக்கவில்லை. அத னால் அந்த தடையை எப்படி செயல்படுத்துவது என தெரியாமல் உள்ளாட்சி அதிகாரிகள் குழப் பத்தில் உள்ளனர்.
அது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழக அரசு ‘பிளாஸ்டிக் மேலாண்மை விதி கள்- 2016’ஐ உருவாக்கியுள்ளது. அதில் கடைக்காரரோ, சாலை யோர வியாபாரியோ, தாங்கள் விற்கும் பொருட்களை பிளாஸ் டிக் பைகளில் நிரப்பி கொடுக்கக் கூடாது.
அவ்வாறு கொடுத்தால், அந்தந்த உள்ளாட்சிகளில் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் மேலாண்மை தொடர்பான துணை விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு அபராதம் விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
விதிகளை உருவாக்கவில்லை
ஆனால் இதுவரை தமிழகத்தில் எந்த உள்ளாட்சியும் பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கான தண்டனை குறித்த துணை விதிகளை உருவாக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் உத்தரவிட்டபடி, ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது. விதிமீறலில் ஈடுபடுவோருக்கு தண்டனையோ, அபராதமோ விதிக்காமல் எப்படி தடையை செயல்படுத்துவது என தெரிய வில்லை.
இவ்வாறு உள்ளாட்சி அதிகாரிகள் கூறினர்.
பிளாஸ்டிக் தடையை மீறு வோர் மீது எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, “பிளாஸ்டிக் தொழிற் சாலையை மூடும் அதிகார மும், அதற்கான விதிகளும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத் திருப்போர், பயன்படுத்துவோர் மீது அந்தந்த உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்கும். விரை வில், தண்டனைகள் குறித்த அரசாணையை அரசு வெளியிடும்” என்றனர்.
பிளாஸ்டிக் தடையை மீறு வோருக்கான தண்டனை குறித்த துணை விதிகள் உருவாக்கப்பட் டுள்ளதா என சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “அதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன” என்று கூறினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT