Published : 03 Dec 2018 09:56 AM
Last Updated : 03 Dec 2018 09:56 AM
மஞ்சள் நீர் கால்வாய் மூலம் நத்தப் பேட்டை ஏரிக்கு வந்து சேரும் பிளாஸ்டிக் கழிவுகளால், அத னுடன் இணைந்த 17 ஏரிகளும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள் ளது. எனவே ஏரியின் முகத்துவார பகுதியில் வடிகட்டி அமைத்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரத்தின் நடுவே அமைந்துள்ள மஞ்சள் நீர் கால் வாய் நகரப் பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வாயாக விளங்கி வருகிறது. ஒக்கப்பிறந்தான் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர், நகரத்தின் நடுவே உள்ள விவசாயிகளின் பாசனத் தேவையை பூர்த்தி செய்து, நத்தப்பேட்டை ஏரியை சென்றடை யும் வகையில் மன்னர்கள் காலத் தில் கட்டமைக்கப்பட்டதாக கூறப் படுகிறது. ஒக்கப்பிறந்தான் குளத் தின் பெரும் பகுதி தற்போது ஆக் கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் நகரத்தின் கழிவுகள் கொட் டப்படும் இடமாக உள்ளது. எனவே இந்த ஏரியின் உபரிநீர் கால்வாயாக இருந்த மஞ்சள் நீர் கால்வாய், தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது.
இக்கால்வாயில், நகரப் பகுதி யில் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் மற்றும் சாலைகளில் தேங்கும் மழைநீர் வெளியேறி நத்தப்பேட்டை ஏரியை சென்றடைகிறது. இதில், கழிவுநீருடன் டன் கணக்கிலான பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து நாள் தோறும் ஏரிக்கு வருகின்றன. இத னால், ஏரியின் தண்ணீர் முற்றிலும் மாசமடைந்துள்ளது. இந்த ஏரியி லிருந்து வெளியேறும் தண்ணீர் பாசன கால்வாய் வழியாக விளை நிலங்களில் புகுந்துவிடுகிறது.
இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு விளை நிலங் கள் பிளாஸ்டிக் கழிவுகளால் மலட்டு நிலமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஏரியின் உபரிநீர் சென்றடையும் வையாவூர், களியனூர், தென்னேரி உள்ளிட்ட 17 ஏரிகள் மாசடைந்து வருகின்றன. அதனால், மஞ்சள்நீர் கால்வாய் ஏரியில் கலக்கும் முகத்துவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை வடிகட்ட நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க செயலாளர் நேரு கூறும்போது, "குடிநீருக்கு பயன் பட்டு வந்த நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீரை வெளியேற்றி மாசுபடுத் தியது நகராட்சி நிர்வாகம். எனினும், பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஏரி நீரில் பிளாஸ்டிக் கழிவு கள் கலந்துள்ளதால், எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏரியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால், தண்ணீ ரின் அடர்த்தி அதிகரித்து மீன்கள் செத்து மிதக்கின்றன. மீன்களை உண்ணும் பறவைகளும் இறந்து வருகின்றன. அதனால், ஏரியின் முகத்துவார பகுதியில் நவீன கட்டமைப்புகளை ஏற்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை வடிகட்டி அகற்ற வேண்டும்" என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் சர்தார் கூறும் போது, "மஞ்சள் நீர் கால்வாயை தற்போது நகராட்சி நிர்வாகம்தான் பராமரித்து வருகிறது. அதனால், கால்வாய் மூலம் ஏரியை சென்றடை யும் பிளாஸ்டிக் கழிவுகளை, முகத் துவாரத்தில் வடிகட்டி அமைத்து தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT