Published : 18 Dec 2018 09:11 AM
Last Updated : 18 Dec 2018 09:11 AM
வானிலை ஆய்வு மையத்துக்கு ஒவ்வொரு புயலும் ஒரு படிப்பினையை தருவதாக அதன் துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழைக் காலம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடத்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத் தில் உருவான ‘கஜா’ புயல் தரைப் பகுதிக்கு வந்தும் வலுவிழக்காமல் கடந்து செல்லும் பகுதி முழுவதை யும் நாசம் செய்தது. இவை வானிலை வரலாற்றில் அரிதான நிகழ்வு. இதை கண்காணிக்க, இந்திய வானிலை ஆய்வு மையத் தின் இயக்குநர் ஜெனரலே சென்னைக்கு வந்து இரவு பகலாக புயல் நகர்வை கண்காணித்து உள்ளார். இதன்மூலம் புயலின் தீவிரத்தை நாம் உணரலாம்.
தற்போது உருவான ‘பெய்ட்டி’ புயல், தமிழக கரைக்கு அருகில் வந்தும் மழையை கொடுக்காம லேயே கரையை கடந்திருப்பதும் அரிதான நிகழ்வாக பார்க்கப் படுகிறது. இதுபோன்ற இரு வித்தியாசமான புயல்களை வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு சந்தித்திருப்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன், ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:
சென்னை வானிலை ஆய்வு மையம் 1891-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான வானிலை தொடர்பான தரவுகளை பாதுகாத்து வருகிறது. அதன்படி, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் வங்கக் கடலில் டிசம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 51 புயல்கள் உருவாகியுள்ளன. அதில் 1965, 1985, 2003, 2010 ஆகிய ஆண்டு களில் தலா ஒரு புயல் என 4 புயல்கள் மட்டுமே ஆந்திராவில் கரையை கடந்துள்ளன. பெய்ட்டி புயல் 5-வது புயலாக ஆந்திர கரையை கடந்துள்ளது.
இது சென்னைக்கு 600 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தபோது, தமிழகத் துக்கு ஓரிரு இடங்களில் கனமழையை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், இந்த புயல் வடக்கு திசைக் காற்றை ஈர்த்து தமிழக கரையை நெருங்கியும் மழையை கொடுக்காமல், குளிர்ந்த சூழலை மட்டும் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. 200 கிமீ தொலைவில் கரையை நெருங்கி மழையை கொடுக்காமல் சென்றிருப்பது ஒரு அரிதான நிகழ்வாகும்.
கஜா புயல் கரையைக் கடந்த பின்னர் முற்றிலும் செயலிழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வழக்க மாக அப்படிதான் நிகழும். ஆனால் அந்த புயல் கடைசி வரை செயலிழக் காமல் அதிதீவிர புயலாக நகர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை
எனவே ஒவ்வொரு புயலும் தனித்தன்மை வாய்ந்தது. சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கு ஒவ்வொரு புயலும் ஒரு படிப் பினையை கற்றுக்கொடுக்கிறது. அவற்றிடம் இருந்து நாங்கள் பாடத்தை கற்கிறோம். இந்த புயல் பல தனியார் வானிலை ஆய்வாளர் களின் கணிப்பையும் மாற்றிவிட்டது. இதில் இருந்தே வானிலையை கணிப்பது எவ்வளவு சிரமமான பணி என்பது மக்களுக்கு புரிந்திருக்கும். இவ்வாறு எஸ்.பாலசந்திரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT