Published : 08 Dec 2018 08:11 AM
Last Updated : 08 Dec 2018 08:11 AM
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதித்தால் தூத்துக்குடி மக்களுக்கு சீர் செய்ய முடியாத பாதிப்பு ஏற்படும். எனவே, தருண் அகர்வால் குழு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற போராட் டம் வன்முறையில் முடிந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து, ஸ்டெர் லைட் நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதுபற்றி ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை, தீர்ப்பாயம் அமைத்தது.
அறிக்கை தாக்கல்
இக்குழு தாக்கல் செய்த அறிக் கையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது.
ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்த ரவு பிறப்பிக்கும்பட்சத்தில், குழு வால் வரையறுக்கப்பட்ட நெறி முறைகளுடன் அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு பதில்
இவ்வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தாக்கல் செய்த பதில் அறிக்கை விவரம்:
ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா என்பது பற்றி ஆய்வு செய்யவே இக்குழு அமைக்கப்பட்டது. ஆலையை மூடியது தவறா என ஆய்வு செய்வதற்கு இக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இக்குழு தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழல் விதிகளை மீறி செயல்பட் டதற்கான ஆதாரங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக் கப்பட்டுள்ளது. ஆலையை தொடர்ந்து செயல்பட அனுமதித் தால் தூத்துக்குடி மக்களுக்கு சீர்செய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படும்.
மேலும், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப் பித்த உத்தரவை எதிர்த்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல் முறையீட்டு ஆணையத்திடம் ஏற் கெனவே ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என, பதில் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நீதிபதி தருண் அகர் வால் குழு அறிக்கை மீதான இறுதி வாதம் தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரமும், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனும் தங்கள் வாதத்தை தொடங்கினர். இந்த வாதம் வரும் 10-ம் தேதியும் நடை பெறும் எனக் கூறி, விசாரணையை 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடைபெற்றதால், தூத்துக்குடியில் 800-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT