Published : 10 Nov 2018 08:07 AM
Last Updated : 10 Nov 2018 08:07 AM
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் அருகே நேற்று ரூ. 6.75 கோடி செலவில் புதிதாய் கட்டப்பட்ட அன்னதான கூடத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் திறந்து வைத்தார். பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய தாவது:
திருச்சானூரில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, ரூ. 6.75 கோடியில் புதிய அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1985ம் வருடம் திருமலையில், பக்தர்களுக்காக இலவச அன்ன தானம் திட்டம் தொடங்கப்பட்டது. வெறும் 2000 பக்தர்களுக்கு மட்டுமே முதலில் அனுமதி வழங் கப்பட்டு வந்தது. தற்போது எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் இலவச உணவு பரிமாறப்படுகிறது. அன்னதான திட்டத்திற்காக ரூ. 1021 கோடி அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக தினமும் 7000 டன் காய்கறிகள் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் இலவசமாக சுவாமிக்கு அனுப்பி வைக்கின்றனர். இதே போன்று திருச்சானூரிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விதத் தில் புதிய கூடம் கட்டப்பட் டுள்ளது. இவ்வாறு புட்டா சுதாகர் யாதவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT