Published : 19 Nov 2018 09:32 AM
Last Updated : 19 Nov 2018 09:32 AM
காஞ்சிபுரம் அடுத்த களியனூர், வையாவூர் மற்றும் நத்தப் பேட்டை ஏரிகளில் கூட்டம், கூட்டமாக தங்கியுள்ள பறவை களால், மேற்கண்ட ஏரிகள் தற்காலிக சரணாலயமாக மாறியுள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந் தாங்கல் பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, நவம்பர் மாதம் முதலே பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பறவைகள் இனப் பெருக்கத்துக்காக வந்து செல் கின்றன. இவ்வாறு வரும் பறவைகள், ஏரியில் உள்ள நீரை ஆதாரமாகக் கொண்டு ஏரியின் நடுவே உள்ள மரங் களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. மேலும், குஞ்சுகள் வளர்ந்த வுடன் மீண்டும் தாய்நாடு திரும்பு கின்றன.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் போதிய மழை யில்லாததால் சரணாலயத்தில் உள்ள ஏரி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மேலும், ‘கஜா' புயலால் கனமழை பெய்து ஏரி நிரம்பும் என எதிர்பார்த்த நிலையில், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால், இனப்பெருக்கத்துக்காக இங்கு வரும் பறவைகள் அருகில் உள்ள நீர் நிலைகளில் தஞ்சமடைந்து வருகின்றன.
காஞ்சிபுரம் நகரத்தின் எல்லைகளாக விளங்கும் வையாவூர், களியனூர் மற்றும் நத்தப்பேட்டை ஏரிகள் நகரப் பகுதியில் பெய்த சிறிது மழை யினால் ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது.
மேலும், ஏரியின் நடுவே மற்றும் அதைச் சுற்றி ஏராளமான கருவேல மரங்கள் இயற்கை அரணாக அமைந் துள்ளதால், பறவைகள் மேற் கண்ட ஏரிகளில் உள்ள மரக் கிளைகளில் தங்கியுள்ளன. மேலும், இப்பறவைகள் ஏரியில் ஆங்காங்கே நீந்தி இரை தேடுவதால் அது பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக் கிறது.
வையாவூர், நத்தப்பேட்டை கிராம மக்கள் இதுகுறித்து கூறும்போவது, “ஏரிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதாலும் எளிதில் இரை கிடைக்கும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால், மேற்கண்ட ஏரி களில் பறவைகள் அதிக அள வில் தங்கியுள்ளன. மேலும், இங்கு அமைதியான சூழல் உள் ளதால் பறவைகள் தொடர்ந்து இங்கு தங்கியிருக்கும் என நம்புகிறோம்.
பறவைகள் தங் களின் இருப்பிடங்களை எளிதில் தேர்வு செய்யாது. இந் நிலையில், மேற்கண்ட ஏரிகளை பாதுகாப்பான பகுதி யாக கருதி பறவைகள் தங்கி யிருப்பதால் இச்சூழலை பாது காக்க வேண்டியது அவசிய மாகிறது. அதனால், வனத் துறை அதிகாரிகள் பறவை களின் பாதுகாப்புக்காக ஏரிக் கரைகளில் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஏரிகளில் தங்கி யுள்ள பறவைகளின் பாதுகாப் புக்கான அனைத்து நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன. பறவைகளுக்கு இடை யூறு ஏற்படுத்தினால் அவர் களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT