Last Updated : 05 Nov, 2018 09:59 AM

 

Published : 05 Nov 2018 09:59 AM
Last Updated : 05 Nov 2018 09:59 AM

மாமல்லபுரம் நகரத்தின் 4 நுழைவு சாலைகளில் பாரம்பரிய கலை சின்னங்களுடன் கூடிய அலங்கார வளைவுகள் அமைக்க பரிந்துரை

மாமல்லபுரம் நகரத்தின் 4 நுழைவு பகுதிகளில், பல்லவ மன்னர்களின் சிற்பக் கலை அழகை பறைசாற்றும் வகையில், பாரம்பரிய கலை சின்னங்களுடன் கூடிய அலங்கார வளைவுகள் அமைக்க சுற்றுலாத் துறையின் பெருந்திட்ட குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை பறைசாற்றும் வகையில் பல்வேறு குடவரை சிற்பங்கள் அமைந்துள்ளன. யுனெஸ்கோ நிறுவனத்தின் அங்கீ காரம் பெற்ற சிற்பங்களை தொல்லி யல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. இச்சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காக, வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், சர்வதேச சுற்றுலா தலமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது.

எனினும், சுற்றுலா பயணிகளுக் கான அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை தரமான தாக இல்லை. இதனால், சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதி களை சர்வதேச தரத்துக்கு இணை யாக மேம்படுத்த சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, மத்திய அரசின் ஒப்புதலோடு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் உதவியோடு, மேம்பாட்டுப் பணி களுக்கான வடிவமைப்பு மாதிரி கள் மற்றும் திட்டங்களை தயா ரித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இக்குழு வினர் மாமல்லபுரம் நகரில் சாலை களை மேம்படுத்தவும், இந்நக ருக்கு சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி மற்றும் ஒஎம்ஆர் பகுதிகளிலிருந்து செல்லும் 4 சாலை களை நுழைவு வாயில்களாக அடை யாளப்படுத்தி, அங்கு பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை பறைசாற்றும் வகையில், நவீன வேலைப்பாடுகளுடன் கூடிய அலங் கார நுழைவு வாயில்களை அமைக் கவும் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர். மேலும், மேற்கண்ட சாலைகளில் எந்தப் பகுதியில் அலங்கார வளைவுகளை அமைக்கலாம் என மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோ சித்து வருகின்றனர். இத னால், விரைவில் ஈசிஆர், ஓஎம்ஆர் மற்றும் காஞ்சிபுரம் நெடுஞ்சாலை யில் அலங்கார வளைவுகள் அமைய உள்ளன.

இதுகுறித்து, சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்திய அரசு சுற்றுலாத் துறை மூலம் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு மேம் பாட்டு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன்பேரில், விரைவில் நிதி ஒதுக்கீட்டுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட உள்ளன. இதில், முதற்கட்டமாக நகரத்தின் பாரம்பரியத்தை அடை யாளப்படுத்தும் பணிகளை துரிதப் படுத்தியுள்ளது.

இதில், நகரத்தின் 4 நுழைவு வாயிலாக கருதப்படும் மேற்கண்ட சாலைகளில் அலங்கார வளைவுகள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x