Published : 02 Apr 2014 10:38 AM
Last Updated : 02 Apr 2014 10:38 AM

மனிதநேய மக்கள் கட்சியில் பிளவு:மறுமலர்ச்சி தமுமுக உதயம்

தமிழகத்தில் மனித நேய மக்கள் கட்சியில் பிளவு ஏற்பட்டு மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2009-ல் மனித நேய மக்கள் கட்சி உருவானது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்தது. தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. மாறி மாறி கூட்டணி வைத்தது சிறுபான்மை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பும் மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியை விட்டு நீக்கியுள்ள னர். இவ்வாறு நீக்கப்பட்ட நிர்வாகிகளையும், அதிருப்தி யாளர்களையும் ஒன்றிணைத்து கலந்தாய்வுக் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடத்தப் பட்டது.

அதன்படி தமிழகத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் உட்பட பலர் மமகவி லிருந்து விலகி மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் சாராத அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் கொடியை கேப்டன் அமிருத்தீன் அறிமுகம் செய்து வைத்தார்.

முஸ்லிம் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்காக ஜனநாயக முறையில் போராடுவது, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகப் பிரச் சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x