Published : 06 Nov 2018 09:01 AM
Last Updated : 06 Nov 2018 09:01 AM

போதிய வருமானம் கிடைக்காததால் கட்டுமான தொழிலுக்கு மாறும் நெசவாளர்கள், விவசாயிகள்: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நல வாரியத்தில் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் பலர் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் 17 அமைப்புச் சாரா தொழிலா ளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பணியின்போது விபத்து ஏற்பட்டு இறந்தால் ரூ.5 லட்சமும், காயமடைந்தால் ரூ.1 லட்சமும், வெளியிடங் களில் விபத்து ஏற்பட்டு இறந்தால் ரூ.1 லட்சமும், ஓய்வூதியமாக ரூ.1000-ம் உட்பட பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், கைவினைத் தொழிலாளர் நல வாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம், கைத்தறி மற்றும் கைத்தறிப் பட்டு நெய்யும் தொழிலா ளர் நலவாரியம், விசைத்தறி தொழிலாளர் நலவாரியம் உட்பட 17 வகையான நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வாரியங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் கொத்தனார், தச்சர், கம்பி வளைப்பவர், கூலியாட்கள் என 53 வகையான தொழில் செய்பவர்கள் உறுப்பினராகச் சேர்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் கடந்த 7 ஆண்டுகளில் கணிச மான எண்ணிக்கையில் தொழி லாளர் இணைந்துள்ளனர். இதில் மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரத் துக்கும் அதிகமான தொழிலாளர் கள் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கட்டுமானத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டு பிரதான தொழிலாக இருந்தது. இதனால் பலர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது போதிய அளவு வருமானம் கிடைக்காததால் வேறு தொழில்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட் பெருக்கம் போன்றவற்றால் விவசாய நிலங் களும் கணிசமாக குறைந்துள்ளன. இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நெசவு, விவசாயத் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலை நோக்கி நகர்ந்துள்ள னர். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் சேர்க்கக்கோரி எங்களிடம் ஏராளமானோர் வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர் நல உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் கூறும்போது, “கட்டுமானத் துறையின் வளர்ச்சி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதனால் கட்டுமானத் தொழிலாளர்களும் அதிகரித்துள்ளனர். தொழி லாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 4 லட்சம் தொழிலாளர்களில் 4-ல் ஒரு பகுதியினர் கட்டுமானத் தொழிலாளர்களாக உள்ளனர். இது கடந்த சில ஆண்டுகளாகவே சீராக அதிகரித்து வருகிறது” என்றார்.

கட்டுமானத் தொழில் வேகம் எடுக்கும் அதே வேளையில் காஞ்சிபுரம் மாவட்டத் தின் பாரம்பரியத் தொழில்களான விவசாயம், நெசவு ஆகியவற்றில் உள்ள தொழிலாளர் களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x