Published : 06 Nov 2018 09:02 AM
Last Updated : 06 Nov 2018 09:02 AM

மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் இல்ல திருமணத்தில் புதுமை; மணமக்கள் உட்பட குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம்: விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

வண்டலூர் அருகே நடைபெற்ற திருமண நிகழ்வில் புதுமண தம்பதிகள் உட்பட, 6 பேர் உடல் உறுப்பு மற்றும் உடல் தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வண்டலூர் அருகே ஊரப்பாக்கம் ஐயஞ் சேரி பகுதியைச் சேர்ந்தவர் செ.மணிவேல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு லெனின்குமார், செல்வகுமார் என 2 மகன்கள் உள்ளனர். இதில் செல்வகுமார் வில்வ மரத்தின் மருத்துவ குணங்கள் தொடர்பாக ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். செல்வ குமாருக்கும் சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வீ.மணிவேல் - ராணி தம்பதியரின் மகள் சிவரஞ்சனி என்பவருக்கும் ஊரப்பாக்கத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்த விழாவில் மணமக்கள் தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக அறிவித்தனர். அதேபோல் மணமகனின் குடும்பத்தாரும் உடல் உறுப்பு மற்றும் உடல் தானம் செய்வதாக அறிவித்தனர். உடல் உறுப்புகள் மற்றும் உடலை சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. திருமணத் துக்கு வந்திருந்த உறவினர்கள் இவர்களின் அறிவிப்புகளைக் கேட்டு நெகிழ்ந்து போயி னர். பாராட்டு மழையை பொழிந்தனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் மணமக்களையும் மணவீட்டாரை யும் பாராட்டினார். இதுபோன்ற நிகழ்வுகளால் உடல் உறுப்புகள் தானம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, பலரின் உயிரைக் காக்க உதவும் என அப்போது அவர் தெரிவித்தார்.

கடந்த 2008-ல் விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜிதேந்திரனின் உடல் உறுப்பு தானம் தானம் செய்யப்பட்டதுதான் தமிழ கத்தில் நிகழ்ந்த முதல் உறுப்புதான நிகழ்வு. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது அதிகரித்து, 2017 ஜூலை வரை தமிழகத்தில் 1001 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மணமகன் செல்வகுமார் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னணியில் இருப்பதோடு, மற்ற மாநிலங்களுக்கு முன்னு தாரணமாகவும் விளங்குகிறது. திருமணத் துக்கு முன்பு உடலுறுப்பு தானம் செய்ய முடிவு செய்து, குடும்பத்தாரிடம் தெரிவித் தேன். அண்ணி பிரியதர்ஷினி உட்பட குடும் பத்தினர் ஆர்வமுடன் தாங்களும் தானம் செய்வதாக தெரிவித்தனர். இது எனக்கு ஊக்கத்தை கொடுத்தது. பிறகு பெரிய தயக் கத்துடன் என் மனைவியிடம் திருமணத்துக்கு முன்பு தெரிவித்தேன். அவரும் உறுப்பு தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்தார். மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப் புணர்வை மக்களிடையே அதிகமாக ஏற் படுத்த வேண்டும், என்ற நோக்கத்தில் எனது திருமண விழாவில் உறுப்பு தானம் குறித்து தெரிவித்தோம். திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் எங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து ஆசிர்வதித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x