Published : 12 Nov 2018 06:06 PM
Last Updated : 12 Nov 2018 06:06 PM

தருமபுரி மாணவி பாலியல் பலாத்காரம்: குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபர் நீதிமன்றத்தில் சரண்

தருமபுரி அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 16 வயது மகளை கடந்த வாரம், அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இச்சம்பவத்தால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.1கோடி இழப்பீடும், அரசு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு மருத்துவர்கள் மூலம் மாணவியின் சடலத்தை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும், மலைக்கிராமத்தில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட சதீஷை போலீஸார் கைது செய்தனர். மேலும், மற்றொரு நபரான ரமேஷ் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். நீதிபதி உத்தரவின் பேரில் ரமேஷ் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x