Published : 18 Nov 2018 10:36 AM
Last Updated : 18 Nov 2018 10:36 AM
விருதுநகர் அரசு மருத்துவம னைக்கு வரும் ஏழை கர்ப்பிணிகள் ரத்தப் பரிசோதனைக்காக தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் பரிதவிக்கின்றனர்.
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். நூறுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டதில் 11 அரசு மருத்துவமனைகளும், 52 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல் படுகின் றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணிகளும் கணக்கெடுக்கப்பட்டு அருகில் உள்ள அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயப் பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் அடையாள எண் வழங்கப்படு கிறது. இது அனைத்து அரசு மருத்துவக் கோப்புகளிலும் பதிவு செய்யப்படுவதோடு, பதிவு செய்யாத கர்ப்பிணிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க தடை விதிக் கப்பட்டுள்ளது.
அதனால், அனைத்து கர்ப் பிணிகளும் அரசு மருத்துவ மனையில் தங்களது பெயர் உட்பட அனைத்து விவரங்களையும் பதிவு செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு, கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் ஊட்டச்சத்து உணவுக்கான உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
வசதி படைத்த சிலரைத் தவிர ஏராளமான கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைகளிலேயே பிரசவம் பார்க்கின்றனர். கர்ப்பிணி களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
குறிப்பாக எச்.ஐ.வி. பரிசோ தனை, சர்க்கரை அளவு, உப்புச் சத்து, குளுக்கோஸ் அளவு, எச்.பி. எனப்படும் சிவப்பணுக்கள் எண்ணிக்கை பரிசோதனை, தைராய்டு பரிசோதனை போன்ற வை எடுக்கப்படுவது வழக்கம்.
ஆனால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சுகா தார நிலையங்களிலும், நகர்ப் புற சுகாதார நிலையங் களிலும், தலைமை அரசு மருத்துவமனையிலும் கர்ப்பி ணிகளுக்கு அனைத்து ரத்தப் பரிசோதனைகளும் எடுக்கப் படுவதில்லை. மாறாக மருத்துவர் சீட்டில் தனியார் ரத்தப் பரிசோதனை நிலையங்களில் குறிப்பிட்ட பரிசோதனைகளை எடுத்து வருமாறு கர்ப்பிணிகளை அனுப்புகின்றனர். ஒவ்வொரு பரிசோதனைக்கும் ரூ.400 முதல் 600 வரை செல வாகும். இதனால், ஏழை கர்ப்பிணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரனிடம் கேட்டபோது, அரசு மருத்துவ மனைகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வசதி இல்லை. அதனால் சிலர் தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இப்பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT