Published : 14 Nov 2018 12:28 PM
Last Updated : 14 Nov 2018 12:28 PM
கஜா புயல் எதிரொலியால் கடலூர் மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கஜா புயல் நாளை (வியாழக்கிழமை) மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று மாலைக்குள் முடிவடையும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால், பொதுமக்களுக்கு உடனடியாக செய்திகளைத் தெரிவிக்க கடலூரில் இன்று முதல் 107.8 என்ற அலைவரிசையில் எஃப்.எம் ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது.
வரும் 16-ம் தேதி வரை காவல்துறை, மருத்துவர்கள், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசுத் துறையில் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் புயல் தொடர்பான புகார்களுக்கு 1077, 04142 - 220700, 221113, 233933, 221383 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடலுர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT