Published : 27 Nov 2018 09:59 AM
Last Updated : 27 Nov 2018 09:59 AM
திருவாரூர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கடந்த 10 நாட்களாக மின்சார விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களிலும் ஆங்காங்கே வாய்ப்புள்ள இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை தொடங்கி டெல்டா வின் தெற்கு பகுதியில் உள்ள புதுக் கோட்டை மாவட்டம் வரை மரங்க ளும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்ததில் ஒவ்வொரு குடும்பத்தி னரும், ஏதாவது ஒரு ஒருவகையில் இழப்பை சந்தித்துள்ளனர்.
மின்தடை காரணமாக, நீரின்றி அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள் ளன. பல்வேறு தொழில்களும், தொழில் நிறுவனங்களும் மின்சார மின்றி முடங்கிப் போயுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பலருக் கும் வேலை இழப்பு ஏற்பட்டு பொரு ளாதார நெருக்கடியில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் பல்வேறு துறை களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் முகாமிட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறை ஊழியர் களை ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்கள் பகுதி யில் விரைவாக சீரமைப்பு பணிகள் நடைபெற வேண்டுமென மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரத்தில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் தங்கள் பகுதியையும் பார்வையிட வேண் டும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், அரசுத் தரப்பில் மின் சார சீரமைப்பு பணிகளிலும், நிவா ரண முகாமில் உள்ள மக்களுக் கான தேவைகளைப் பூர்த்தி செய்வ திலும் முழு கவனம் உள்ளதால் மக்களின் அனைத்து பிரச்சினைக ளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக் கச் செய்ய முடியவில்லை என்கின் றனர் அதிகாரிகள்.
இதனால் பொதுமக்கள் ஆத்திர மடைந்து ஆங்காங்கே சாலை மறிய லில் ஈடுபடுகின்றனர். இதனால் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதிலும், பல்வேறு பணிகளுக் காக செல்லும் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவ தேவைக்காக செல்லும் நோயாளி கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சமூக ஆர்வலர்கள் பல ரும் கூறியதாவது: மக்களிடம் உள்ள இயல்பான கோபத்தால் மறியல் போராட்டங்கள் நடைபெற்றாலும், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசி யல் கட்சிகள் பின்னின்று இயக்கு வதாலேயே மறியல் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல் கட்சிகள் இதைக் கைவிட்டு தங்கள் தொண்டர்களை வழிநடத்தி அரசின் நிவாரணப் பணிகளில் ஏற்படுகின்ற குறைகளை தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட பகுதிக ளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடமோ அல்லது ஊட கங்கள் வாயிலாகவோ வெளிப் படுத்தினால் பல்வேறு பிரச்சினைக ளுக்கும் தீர்வு கிடைக்கும்.
அதைவிடுத்து மற்ற நேரங்களில் அணுகுவதைப்போல மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நோக்கத்துடனான போராட்டங் களை ஊக்கப்படுத்துவதை அரசி யல் கட்சியினர் தவிர்த்து பொறுப்பு ணர்வுடன் செயல்பட வேண்டும் என்றனர்.
பணியை தாமதப்படுத்துகின்றனர்
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியபோது, “பெருக வாழ்ந்தானில் மின்கம்பத்தை வேறு வழியாக எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி ஒரு அரசியல் கட்சியின் தொண்டர்கள் சிலர் பணிக்கு பெரும் இடையூறு செய்தனர். அவர்களை சமாதானப்படுத்தவே ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. இதேபோல, மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை சுட்டிக்காட்டி, தங்கள் பகுதிக்கு ஏன் மின்சாரம் வரவில்லை என்று கேட்டு மக்களை தவறாக வழிநடத்துவ தால் மன்னார்குடி, திருவாரூர் பகுதி களில் பரவலாக சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதுவரை திருவாரூர் மாவட்டத் தில் 1,200 மின்கம்பங்களை மாற்றி அமைத்து, வாய்ப்புள்ள பகுதிக ளுக்கு விரைவாக மின் இணைப்பு கொடுத்துவிட்டோம். ஒரு பகுதிக்கு மின்சாரம் வரவில்லை என்றாலும், ஓரிரு வீடுகளுக்கு மின்சாரம் வர வில்லை என்றாலும் மறியல் செய்கின்றனர். அரசியல் கட்சியி னர் மட்டுமின்றி தங்கள் பகுதியில் உள்ள மக்களிடம் செல்வாக்கு பெறுவதாக நினைத்துக்கொண்டு சிலர் போராட்டங்களைத் தூண்டி விட்டு பணிகளை தாமதப்படுத்து கின்றனர் என்பதே உண்மை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT