Published : 15 Nov 2018 08:39 AM
Last Updated : 15 Nov 2018 08:39 AM

சமூக வலைதளங்களால் தேச எல்லைகளைக் கடந்தும் அதிகரிக்கும் குற்றங்கள்; கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டறிய வலியுறுத்தும் வல்லுநர்கள்

முகநூல் (ஃபேஸ்புக்), வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் உதவியால், வயது வரம்பின்றி கூடாநட்பு ஏற்படுவதோடு கொலை, தற்கொலை உள்ளிட்ட குற்றங் களும் அதிகரித்து வருகின்றன.

நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு தீமையை உண்டாக்குகிறது. பண மோசடி உள்ளிட்ட பொருளாதாரக் குற்றங் கள் மட்டுமின்றி, தற்கொலை, கொலையும்கூட சமூக வலை தளங்களால் அதிகரித்துவிட்டன. நடுத்தர வயதைக் கடந்தவர்கள்கூட இதில் இருந்து தப்பவில்லை. மேலும், நாடுகளைத் தாண்டியும் குற்றங்கள் நீள சமூக வலை தளங்கள் காரணமாகின்றன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தர்மலிங்கம் (55). இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். இலங்கை கண்டி யைச் சேர்ந்த ரவீந்திரராஜா என் பவரது மனைவி மனோ ரஞ்சிதம்(45) ஃபேஸ்புக் மூல மாக தர்மலிங்கத்துக்கு பழக்க மாகியுள்ளார். வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர், குழந்தை இல்லாதது உள்ளிட்டவற்றால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த மனோரஞ்சிதத்துக்கு, தர்ம லிங்கத்தின் ஃபேஸ்புக் நட்பு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள் ளது.

செல்போன் மூலம் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்த நிலையில், தர்மலிங்கத்தை நேரில் காண கடந்த செப்டம்பர் மாதம் சுற்றுலா விசா மூலமாக பொள் ளாச்சி வந்துள்ளார் மனோரஞ்சிதம். பொள்ளாச்சி பி.கே.எஸ். காலனி யில் வாடகை வீட்டில் இருவரும் வசித்துள்ளனர். பல சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றுள்ளனர். மனோரஞ்சிதத்தின் விசா முடி வடையும் தருவாயில், ஒருவரை யொருவர் பிரிய மனமில்லாததால் தற்கொலை முடிவுக்குச் சென்றனர்.

இருவரும் ரயில் முன்பு பாய்ந்ததில், தர்மலிங்கம் உயிரி ழந்தார். லேசான காயத்துடன் உயிர் தப்பினார் மனோரஞ்சிதம்.

இச்சம்பவம் குறித்து கோவை அரசு கலைக் கல்லூரி உளவியல் துறைத் தலைவர் முனைவர் டி.வீர மணியிடம் கேட்டபோது: பசி, தாகம், பாலுறவு ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். இதை ஆதாரமாகக் கொண்டுதான் உலகம் இயங்குகிறது. இவற்றை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்கள். இதற்கு வயது வரம்பு, திருமண எல்லைகள் போன்றவை கிடை யாது.

அரவணைப்பு கூட சிலருக்குப் போதுமானதாக இருக்கிறது. இவ்வாறு கிடைத்த உறவைக் கைவிட வேண்டிய நிலையில், தற் கொலை, கொலை போன்ற குற்றங் களைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.

நடுத்தர வயதைக் கடந்துவிட் டால் தங்களது காதலை பிறரிடம் சொல்லக்கூட தயங்குவர். ஆனால், சமூக வலைதளங்கள் இந்தத் தடையை தகர்த்தெறிந்துவிட்டன. தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, பேசிப் பழக மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுக்கின்றன. இது குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது.

செல்போன் இல்லாமல் வாழ்வே இல்லை என்ற அடிமை நிலைக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தள்ளப்பட்டுவிட்டனர். பயணங் களில் மட்டுமல்ல, பக்கத்து வீட்டுக் காரரிடம் கூட பேசுவது குறைந்து விட்டது. இத்தகைய புதிய கலாச்சாரத்தால் ஏற்படும் பாதிப்பு களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கவலையுடன்.

கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்

காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.குணசேகரன் கூறும்போது, `சமூகவலைதளங்கள் தீக்குச்சியைப் போன்றவை. விளக்குப் பற்றவைக்கவும் முடியும், வீட்டைக் கொளுத்தவும் முடியும். ஆனால், இவற்றால் நன்மைகளைக் காட்டிலும், தீமைகள்தான் அதிகம் விளைகின்றன. புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின்போது தகவல் பரிமாற்றத்துக்கு செல்போன் உதவினாலும், வதந்திகள் பரவுவதுதான் அதிகமாக உள்ளது. தவறான தகவல்கள், ஆபாச படங்களை பரப்புவது, மோசடி உள்ளிட்ட குற்றங்களுடன், கொலை, தற்கொலை வரையி லான குற்றங்களுக்கும் சமூகவலை தளங்கள் காரணமாகி வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கான, கட்டுப் படுத்துவதற்கான தொழில் நுட்பங் கள் கட்டாயம் தேவை` என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x