Published : 20 Aug 2014 11:22 AM
Last Updated : 20 Aug 2014 11:22 AM

முதல்வர் பேசும் மேடை அருகே `முல்லை பெரியாறு, வைகை அணைகள்’: செயற்கை நீர்போக்கிகளுடன் அமைக்கும் பணி தீவிரம்

மதுரையில் முதல்வர் பாராட்டு விழாவுக்கான மேடை அருகே முல்லை பெரியாறு, வைகை அணைகளில் இருந்து நீர் வெளியேறுவதுபோல் செயற்கை யாக அமைக்கும் பணியில் சினிமா குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்குகிறது.

இதன் நீர்தேக்க அளவை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் வரும் 22ம் தேதி மதுரை ரிங்ரோடு பாண்டி கோயில் அருகே பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தலும், 3 லட்சம் பேர் நிற்கும் வகையில் அகண்ட வளாகமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, முல்லை பெரியாறு அணையின் வெற்றி யைக் கொண்டாடும் விழா என்பதால், மேடை அருகே அந்த அணையை செயற்கையாக அமைக்க அதிமுக-வினர் திட்ட மிட்டனர்.

அதைத் தொடர்ந்து மேடைக்கு அருகே ரிங் ரோட்டையொட்டி இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின் றன. சென்னை திரைப்பட கலை இயக்குநர் செல்வன் தலை மையில் 150-க்கும் மேற்பட்ட குழுவினர் கடந்த 4 நாட்களாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி அவர்கள் கூறும்போது, ’மேற்குத் தொடர்ச்சி மலையில் முல்லை பெரியாறு அணை இருப்பது போலவும், அங்கிருந்து நீர் வெளியேறி வைகை அணைக்கு வந்து, நீர்போக்கிகள் வழியாக வெளி யேறுவது போலவும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் முறையில் வடிவ மைத்து வருகிறோம். 200 அடி நீளம், 60 அடி அகலம், 66 அடி உயரத்தில் செயற்கையாக அமைக்கப்படும் இந்த அணை களின் கீழ் தண்ணீர் தொட்டி கட்டப்படுகிறது.

இங்கிருந்து 15 மின் மோட்டார் பம்புகள் வழியாக நீரை மேல்பகுதிக்கு ஏற்றி, அங்கிருந்து மீண்டும் கீழே விழுவதுபோல் வடிவமைத்து வருகிறோம். 5 மாவட்ட விவசாயிகள் சேர்ந்து நடத்தும் விழா என்பதால் முல்லை பெரியாறு அணையுடன், வைகை அணையையும் சேர்த்து வடிவமைத்து வருகிறோம். வியாழக்கிழமை முதல் இந்த செயற்கை அணைகளில் இருந்து நீர் வழிந்தோடுவதைக் காண முடியும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x