Published : 19 Nov 2018 09:43 AM
Last Updated : 19 Nov 2018 09:43 AM
தமிழகத்தில் உள்ள 19 அரசு பல் கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களே துணைவேந்தர் பதவிக்கு போட்டியிட்டு, அப்பத வியை வகிக்கும் நிலை உள்ளது. இதனால் கல்லூரிகளில் பணி யாற்றும் இணைப் பேராசிரியர் களுக்கு துணைவேந்தர் பதவிக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக 2015-ம் ஆண்டு விதிமுறையில் மாற்றம் செய்யப் பட்டது. இந்த விதிமுறையில் திருத் தம் செய்ய வேண்டுமென்ற கோரிக் கையும் தற்போது எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் டி.வீரமணி கூறியதாவது:
துணைவேந்தர் பதவிக்கு 10 ஆண்டுகளாக பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் அல்லது முன்னாள் துணைவேந்தர்கள் போட்டியிடலாம் என்று தமிழக அரசு விதிமுறை வகுத்துள்ளது.
அதேநேரத்தில், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறை-2018-ன்படி அரசுக் கல்லூரிகளில் இணைப் பேராசிரியர்களுக்கு, பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கலாம் என்று குறிப்பிடுகிறது. இந்த விதிமுறையை நடைமுறைப் படுத்தினால், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களும் போட்டி யிட்டு துணைவேந்தர்களாக வர முடியும். துணைவேந்தர் பதவியை அனைவருக்குமானதாக மாற்றப்பட வேண்டும்.
ஓய்வுக்குப் பிறகும் பதவி
ஏற்கெனவே கல்லூரி இணைப் பேராசிரியர்களும் துணைவேந்தர் களாகும் வாய்ப்பு கடந்த 2015-ல் உயர்கல்வித் துறை முன்னாள் செயலர் சுனில் பாலிவாலால் திருத்தம் செய்யப்பட்டு, ரத்து செய் யப்பட்டுவிட்டது. அரசுக் கல்லூரி களில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு அதிகபட்ச பதவி உயர்வே, இணைப் பேராசிரியர்தான். கல் லூரிகளில் உதவிப் பேராசிரியர் களாகப் பணியைத் தொடங்குபவர் கள், 13 ஆண்டுகள் பணியாற்றினால் இணைப் பேராசிரியர்களாக முடியும்.
இணைப் பேராசிரியர்கள் எத் தனை ஆண்டுகள் பணியாற்றினா லும், பேராசிரியர்களாக முடியாது.
பல்கலைக்கழகங்களில் பேரா சிரியர்களாக பணியாற்றுபவர்கள், பணி ஓய்வுக்கு பிறகும் துணை வேந்தர் பதவிக்கு போட்டியிட்டு, துணைவேந்தராக முடியும். கல்லூரி ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்பில்லை. எனவே கல்லூரி களில் பணிபுரிபவர்களுக்கும் பேராசிரியர்களாக பதவி உயர்வு அளித்து, துணைவேந்தராக பதவி வகிக்கும் வாய்ப்பை தமிழக அரசு உருவாக்கித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விதிமுறைகளில் திருத்தம்
பாரதியார் பல்கலைக்கழக சுயநிதி கல்லூரி நிர்வாகிகள் கூட்டமைப்பின் நிர்வாகி எஸ்.சரவணக்குமார் கூறியதாவது:
சுயநிதி கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்தில் அரசு விதிமுறை பின்பற்றப்பட்டு வரு கிறது. முன்பு, எம்ஃபில், பிஹெச்.டி. முடிக்காமல் பணியாற்றியவர் விரிவுரையாளர், எம்ஃபில் முடித்து 5 ஆண்டுகள் பணியாற்றியவர் சீனியர் ஸ்கேல் விரிவுரையாளர், பிஹெச்.டி. முடித்து 4 ஆண்டுகள் பணியாற்றியவர் தேர்வு நிலை விரிவுரையாளர் என பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
பின்னர், அப்பணியிடம் உதவிப் பேராசிரியர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பணியிடத்துக் கான கல்வித் தகுதி பிஹெச்.டி. அல்லது செட், நெட் ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி என விதிமுறை யில் மாற்றம் செய்யப்பட்டு, தற் போது நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு 13 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றுபவர் கள் இணைப் பேராசிரியர்களாக வர முடியும். 20 ஆண்டுகள் பணியாற்றி, துறைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக பதவிகளை வகிப்பவர்கள் முதல்வராகவும் போட்டியிட முடியும்.
அதேநேரத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும் மேலாண்மை படிப்புகளில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வரு கின்றன. அங்கு பணியாற்றுபவர்கள் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். எனவே இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். இணைப் பேராசிரியர்களும், பேரா சிரியர்களாக பதவி உயர்வு பெறும் வகையில் விதிமுறைகளில் திருத் தம் செய்ய வேண்டும். அப்போது தான் சுயநிதிக் கல்லூரிகளில் பணி யாற்றுபவர்களும் துணைவேந்தர் பதவிக்கு வருவது சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணைவேந்தர்களான இணைப் பேராசிரியர்கள்
இதற்கு முன், கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய சி.சுப்பிரமணியன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், பொது நிர்வாகவியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய முத்துகுமார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர்களாகப் பதவி வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT