Published : 22 Nov 2018 10:25 AM
Last Updated : 22 Nov 2018 10:25 AM
இந்திய ரயில்வேயில் கடந்த 10 ஆண்டு களில் 14,557 ஆளில்லா ரயில்வே கேட்கள் நீக்கப்பட்டு, சுரங்கப்பாதை கள் மற்றும் மேம்பாலங்களாக மாற்றப் பட்டுள்ளன. அடுத்த மாதத்துக்குள் ஆளில்லா ரயில்வே கேட்களே இல்லை என்ற நிலை உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் பாதைகளில் ஆளில்லா ரயில் கேட்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து ஆளில்லா ரயில்வே கேட்களை அகற் றும் பணிகள் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1000 ஆளில்லா ரயில்வே கேட்கள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக ஆள் இருக்கும் கேட்களும், வாய்ப்புள்ள இடங்களில் சுரங்கப்பாதைகள் அல்லது சிறிய மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒட்டுமொத்த ரயில்வே கேட்களையும் கணக் கெடுத்து, இந்த ஆண்டுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என அந்தந்த ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரி களின் தொடர் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. அதன்படி மொத்தம் 12 மண்டலங்களிலும் உள்ள ஆளில்லா கேட்கள் நீக்கப்பட்டுள்ளன. குறிப் பாக, தெற்கு ரயில்வேயில் இருந்த 1,054 ஆளில்லா ரயில்வே கேட்களும் மூடப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
விபத்துகளை குறைக்க நாடு முழுவதும் உள்ள ஆளில்லா கேட்களை உடனடியாக மூட ரயில்வே அமைச்சகம் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பெல்லாம் ஆண்டுக்கு அதிகபட்சமாக 1,500 ஆளில்லா ரயில் கேட்கள் அகற்றப்படும். ஆனால், இந்த ஆண்டு கடந்த 7 மாதங்களில் மட்டும் 3,401 ஆளில்லா கேட்கள் அகற்றப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 77 ஆளில்லா கேட்கள், அடுத்த மாதம் இறுதிக்குள் அகற்றப்பட்டு, ரயில்வேயில் ஆளில்லா கேட்களே இல்லாத நிலைக்கு மாற்றப்படும். பயணிகள் அதிகளவில் தண்ட வாளங்களை கடக்கும் இடங்களை தேர்வு செய்து, சுற்றுச்சுவர்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. நவீன கருவிகள் வாங்கி ரயில் பாதைகளை கண்காணித்தல், ரயில் தண்டவாளங்கள் புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளையும் ரயில்வே தொடர்ந்து மேற்கொண்டு வரு கிறது. இதன்மூலம் விபத்து, உயிரிழப்புகளை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT